×

தென்மேற்கு பருவமழை தீவிரமடையும் முன் மழைநீர் கால்வாய்களை தூர்வார கோரிக்கை

ஊட்டி, ஜூன் 6: பருவமழை தீவிரமடையும் முன் ஊட்டி நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள மழை நீர் கால்வாய்களை தூர் வார வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. நீலகிரி மாவட்டத்தில் ஆண்டு தோறும் ஜூன் மாதம் துவங்கி இரு மாதங்கள் தென்மேற்கு பருவமழை பெய்யும். இந்த பருவமழை துவங்கினால், நாள் தோறும் காற்றுடன் கூடிய மழை பெய்த வண்ணம் இருக்கும். இதனால், அனைத்து பகுதிகளிலும் மழை நீர் பெருக்கெடுத்து ஓடும். குறிப்பாக, இந்த மழை ஊட்டி, கூடலூர் மற்றும் பந்தலூர் பகுதிகளை அதிகம் பாதிக்கும்.

இந்நிலையில், ஊட்டி நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள பெரும்பாலான கால்வாய்கள் தூர்வாரப்படாமல் உள்ளது. இதனால், மழை பெய்தால், தற்போது கால்வாயில் ஏற்பட்டுள்ள அடைப்பால், சாலைகளில் தண்ணீர் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், பொதுமக்கள் பாதிக்கப்படுவர். மேலும், சாலைகள் பழுதடையும் அபாயமும் ஏற்படுகிறது. எனவே, ஊட்டி நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள அனைத்து மழை நீர் கால்வாய்களும் பருவமழை தீவிரமடையும் முன் தூர் வாரி சீரமைக்க வேண்டும். மேலும், அனைத்து கால்வாய்களும், கோடப்பமந்து கால்வாயுடன் இணைக்கும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

The post தென்மேற்கு பருவமழை தீவிரமடையும் முன் மழைநீர் கால்வாய்களை தூர்வார கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Ooty ,Nilgiris district ,Dinakaran ,
× RELATED ஊட்டி சுற்று வட்டார பகுதிகளில்...