×

திருவாரூர் ரயில்வே மேம்பாலத்தில் தடுப்பு கம்பிகள் அமைப்பதில் பாரபட்சம்

திருவாரூர், பிப்.26: திருவாரூர் ரயில்வே மேம்பாலத்தில் எஞ்சியுள்ள பகுதியில் தடுப்பு கம்பிகளை அமைக்க வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருவாரூரில் கடந்த 45 ஆண்டுகளுக்கு முன்னர் புதிய பேரூந்து நிலையமானது (தற்போது பழைய பேருந்து நிலையம்) அமைக்கப்பட்ட நிலையில் அங்கிருந்து தஞ்சை, நாகை மற்றும் திருத்துறைபூண்டி செல்லும் சாலைகள் மிகவும் குறுகலாவும், போக்குவரத்து நெரிசல் அதிகமாகவும் இருந்ததன் காரணமாக இந்த வழிதடங்களுக்கு செல்வதற்காக சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்னர் பேருந்து நிலையத்திலிருந்து பைபாஸ் சாலை அமைக்கப்பட்டது. இதில் நாகை மற்றும் திருத்துறைபூண்டி வழிதடங்களை கடப்பதற்கு ரயில்வே தண்டவாளமானது குறுக்கே இருந்நதால் இதற்காக பைபாஸ் சாலையின் இடையே ரயில்வே மேம்பாலம் ஒன்றும் கட்டப்பட்டு, தற்போது பயன்பாட்டில் இருந்து வருகிறது. இந்நிலையில் இந்த பாலத்தின் பாதுகாப்பு கருதி கடந்த ஒரு வருடத்திற்கு முன் பாலத்தின் மீது தடுப்பு கம்பிகள் அமைக்கப்பட்டுள்ளன. தற்போது இந்த பாலத்தினை நாள் ஒன்றுக்கு சுமார் 10 ஆயிரம் கனரக வாகனங்கள் கடந்து செல்கிறது. இதுமட்டுமின்றி பல்லாயிரக்கணக்கான இருசக்கர வாகனங்களும் கடந்து செல்கின்றன.\

மேலும் தற்போது புதிய பேருந்து நிலையத்திலிருந்து பழைய பேருந்து நிலையத்திற்குள் பேருந்துகள் சென்று வராததன் காரணமாக இந்த மேம்பாலமே நாகை மற்றும் திருத்துறைபூண்டி செல்வதற்கு பேருந்து நிறுத்தமாக இருந்து வருகிறது. இந்நிலையில் இந்த தடுப்பு கம்பி அமைக்கும் பணியானது பாதியில் நிறுத்தப்பட்டுள்ளதால் பயணிகள் மற்றும் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் நலன் கருதி எஞ்சியுள்ள பகுதிக்கும் தடுப்பு கம்பிகளை அமைக்க வேண்டும் என ரயில்வே நிர்வாகத்திற்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : railway bridge ,Thiruvarur ,
× RELATED வள்ளியூர் ரயில்வே பாலத்தில்...