×

கடலூரில் ₹50 ஆயிரம் கோடியில் பெட்ரோலிய சுத்திகரிப்பு ஆலை

கடலூர், பிப். 26:  கடலூரில் ரூ.50 ஆயிரம் கோடியில் பெட்ரோலிய சுத்திகரிப்பு ஆலை உறுதியாக அமைக்கப்படுமென அமைச்சர் சம்பத் தெரிவித்தார்.தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 72வது பிறந்த நாளினை முன்னிட்டு கடலூர் மத்திய மாவட்ட மாணவரணி சார்பில் திருப்பாதிரிபுலியூரில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. நகர செயலாளர் குமரன் தலைமை வகித்தார்.கூட்டத்தில், அமைச்சர் சம்பத் பேசியதாவது, மகளிர் சுய உதவிக்குழு, தொட்டில் குழந்தை திட்டம், மகளிர் காவல் நிலையம், மகளிர் நீதிமன்றங்களை உருவாக்கியவர் ஜெயலலிதா. அதனால்தான் அவரது பிறந்த நாளை பெண் குழந்தைகள் பாதுகாப்பு தினமாக தற்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். வீட்டுமனைப்பட்டா, கறவை மாடு, ஆடு வழங்குதல், தையல் இயந்திரம் என்று அனைத்து நலத்திட்டங்களையும் பெண்களை முன்னிலைப்படுத்தியே வழங்கியவர் ஜெயலலிதா தான். வேளாண் மண்டலத்தைத் தொடர்ந்து, பெட்ரோலிய- ரசாயன மண்டல அறிவிப்பினையும் ரத்து செய்துள்ளோம். எனினும், கடலூரில் ஏற்கனவே ஒப்பந்தம் செய்துள்ள நிறுவனம் ரூ.50 ஆயிரம் கோடியில் பெட்ரோலிய பொருட்களை சுத்திகரிக்கும் ஆலை செயல்படும். அதற்கான ஏற்பாடுகள் நடைபெறுகிறது என்றார். கூட்டத்தில், மாவட்ட நிர்வாகிகள் எம்ஜிஆர் மன்றம் குமார், எம்ஜிஆர் இளைஞரணி பெருமாள்ராஜா, அண்ணா தொழிற்சங்கம் பாலகிருஷ்ணன், ஒன்றிய செயலாளர் ராம.பழனிசாமி, ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் தெய்வ பக்கிரி, நிர்வாகிகள் ஏழுமலை,  சுதாகர், மணி அன்பு, சேகர் உள்ளிட்டோர் பங்கேற்றனர். பேரவை நகர செயலாளர் கந்தன் நன்றி கூறினார்.




Tags : Cuddalore ,
× RELATED குண்டர் சட்டத்தில் வாலிபர் கைது