×

ஊத்துக்கோட்டையில் கொரோனா விழிப்புணர்வு பேரணி

ஊத்துக்கோட்டை, பிப். 21: ஊத்துக்கோட்டையில், கொரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வு பேரணி நடந்தது. இதில் ஏராளமான மாணவர்கள் பங்கேற்றனர். ஊத்துக்கோட்டை பேரூராட்சியில் எல்லாபுரம்  ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் ஊத்துக்கோட்டை அரசு மருத்துவமனை சார்பில்  கொரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வு பேரணி நேற்று நடைபெற்றது. பெரியபாளையம் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் பிரபாகரன் தலைமை தாங்கினார். சுகாதார மேற்பார்வையாளர் சுப்பிரமணி வரவேற்றார். டாக்டர்கள் தீபா, ரூபஸ்ரீ, தலைமையாசிரியர்கள் மகேஸ்வரன், துரைசாமி, நீலகண்டன், பாஸ்கர்,  மேலாளர் சுதர்சனம், பேரூராட்சி செயல் அலுவலர் ரவிச்சந்திரபாபு ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளர்களாக ஊத்துக்கோட்டை தாசில்தார் முருகநாதன், டிஎஸ்பி சந்திரதாசன் ஆகியோர் கலந்து கொண்டு கொரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வு பேரணியை கொடியசைத்து தொடக்கி வைத்தனர்.

இந்த பேரணி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் இருந்து தொடங்கி திருவள்ளூர் சாலை, அண்ணா சிலை வழியாக நேரு பஜார், வழியாக சென்று விஏஒ அலுவலகத்தை அடைந்தது. பின்னர், மாணவர்களுக்கு கொரோனா வைரஸ் குறித்தும், அது பரவுவது குறித்தும் கருத்துரை வழங்கப்பட்டது. இந்த பேரணியில், அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலை பள்ளியை சேர்ந்த  மாணவ, மாணவிகள்,  மாணவர் காவல் படை மற்றும் தேசிய மாணவர் படை மாணவர்கள்,  கோதண்டராமன் அரசு நிதி உதவி பெறும் உயர்நிலைப்பள்ளி மற்றும்  விவேகானந்தா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவ-மாணவிகள் என 4 பள்ளிகளில் இருந்து என்சிசி ஆசிரியர் விஜயகுமார், உடற்கல்வி ஆசிரியர் வள்ளுவன், ஓவிய ஆசிரியர் ரவி உட்பட 2 ஆயிரம் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

Tags : Corona ,awareness rally ,Udathukottai ,
× RELATED ஆவடி சத்தியமூர்த்தி நகர் அரசினர்...