மத்திய அரசின் பட்ஜெட்டை கண்டித்து தாராபுரத்தில் கம்யூனிஸ்ட்கள் ஆர்ப்பாட்டம்

தாராபுரம்.பிப்.21: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மத்திய அரசின் மக்களுக்கு பயனற்ற பட்ஜெட்டை கண்டிப்பதாக கூறி தாலுகா செயலாளர் கனகராஜ் தலைமையில் தாராபுரம் அண்ணா சிலை அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

   ஆர்ப்பாட்டத்தின்போது மத்திய அரசு தனது பட்ஜெட்டில் நாட்டின் செல்வ வளங்களை கொள்ளையடிக்க கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு அனுமதி அளித்துள்ளதை கண்டித்தும், விவசாயிகள் தொழிலாளர்கள் நலனை பாதுகாக்க பட்ஜெட்டில் எந்த திட்டமும் இல்லை என குறை கூறியும், சிறு குறு நடுத்தர தொழில்களை அழிவிலிருந்து மீட்க நடவடிக்கை இல்லை என சுட்டிக்காட்டியும், கல்வி சுகாதாரம் குடிநீர் 100 நாள் வேலைத்திட்டத்திற்கு மிகக் குறைந்த நிதி ஒதுக்கீட்டை செய்ததை கண்டித்தும், ஆயுள் காப்பீட்டு கழகத்தை தனியாருக்கு தாரைவார்த்து உள்ளவை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பப்பட்டன. ஆர்ப்பாட்டத்தில் நகரச் செயலாளர் சுப்பிரமணி, சிஐடி பொன்னுசாமி, ஓய்வு பெற்ற அரசு ஊழியர் நல அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் மேகவர்ணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: