×

தவறாக பயன்படுத்துகின்றனர் ஸ்மார்ட் ரேஷன் கார்டுகளை யாரிடமும் கொடுக்க வேண்டாம் மனுநீதிநாள் முகாமில் டிஎஸ்ஓ பேச்சு

செய்யாறு, பிப்.21: ஸ்மார்ட் ரேஷன் கார்டுகளை யாரிடமும் கொடுக்க வேண்டாம் என செய்யாறு அருகே நடந்த மனுநீதிநாள் முகாமில் மாவட்ட விநியோக அலுவலர் ஹரிதாஸ் பேசினார்.செய்யாறு ஒன்றியம் பாப்பாந்தாங்கல் கிராமத்தில் நேற்று முன்தினம் மனுநீதிநாள் முகாம் நடந்தது. தாசில்தார் மூர்த்தி வரவேற்றார். ஒன்றியக்குழு தலைவர் ஒ.ஜோதி, துணைத்தலைவர் ஆர்.வீ.பாஸ்கரன் முன்னிலை வகித்தனர். முகாமில், மாவட்ட விநியோக அலுவலர் ஹரிதாஸ், 78 பயனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.அப்போது அவர் பேசுகையில், ‘பூமரங்கள் கிராமத்தில் பகுதிநேர ரேஷன் கடை திறப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். ஆதார்கார்டு போலவே ஸ்மார்ட் ரேஷன் கார்டுகளையும் பத்திரமாக வைத்துக் கொள்ளுங்கள். யாரிடமும் கொடுக்க வேண்டாம். சிலர் அதை தவறாக பயன்படுத்தி பொருட்களை வாங்கி கொள்கின்றனர்' என்றார்.இதில் ஒன்றியக்குழு உறுப்பினர் நந்தினி சக்தி சீனிவாசன், ஊராட்சி தலைவர் நித்தியா குமார், சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் ஹரிகுமார், மண்டல துணை தாசில்தார் துரை, வருவாய் ஆய்வாளர் மோகனா, கிராம நிர்வாக அலுவலர் நாகராஜன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : anyone ,
× RELATED ஆர்சனிக் ஆல்பம் 30சி மருந்தால் எந்த...