×

காஸ் விலை உயர்வைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்

தேனி பிப். 19: சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை மத்திய அரசு உயர்த்தியதை கண்டித்து தேனி பழனிசெட்டிபட்டியில் காங்கிரஸ் சார்பில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. தேனி மாவட்ட காங்கிரஸ் சார்பில், தேனி அருகே உள்ள பழனிசெட்டிபட்டியில்,  காஸ் விலையை உயர்த்திய மத்திய பாரதிய ஜனதா அரசைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு காங்கிரஸ் மாவட்ட பொருளாளர் அப்பு என்ற பாலசுப்பிரமணியன் தலைமை வகித்தார்.  தேனி ஊராட்சி ஒன்றிய துணைத்தலைவர் முருகன் முன்னிலை வகித்தார். தேனி நகர தலைவர் முனியாண்டி வரவேற்றார்.

இதில் தேனி மாவட்ட காங்கிரஸ் தலைவர் கூடலூர் முருகேசன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். ஆர்ப்பாட்டத்தின் போது, ‘மத்திய அரசு சமையல் எரிவாயு விலையை உயர்த்தியதைக் கண்டித்தும், விலை உயர்வை வாபஸ் பெற வலியுறுத்தியும், காலி காஸ் சிலிண்டருக்கு மாலை அணிவித்தும் கண்டன கோஷங்களை எழுப்பினர். இதில் ‘மாவட்ட துணைத்தலைவர்கள் சன்னாசி, கருப்பசாமி, வட்டார தலைவர்கள் புருசோத்தமன், ராஜேஷ் கண்ணன்,   ஜீவா,  நகர தலைவர்கள் முஷாக் மந்திரி, போஸ், நயினார், ஜெயபிரகாஷ், மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் தர்மர், ரசூல், முத்துராஜ், அக்கிம், அபுதாகிர் முத்தையா உள்பட  பலர் கலந்து கொண்டனர்.

Tags : Protests ,gas price hike ,
× RELATED எதிர்ப்பு அலையால் மக்களை...