×

தமிழகத்தில் நதிநீர் இணைப்பை நிறைவேற்ற வேண்டும் வதிலை விவசாயிகள் கூட்டத்தில் தீர்மானம்

வத்தலக்குண்டு, பிப். 19: தமிழக பட்ஜெட்டில் நதிநீர் இணைப்புக்கு நிதி ஒதுக்காததால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளதாகவும், இனியாவது நதிநீர் இணைப்பை நிறைவேற்ற வேண்டும் என வத்தலக்குண்டு விவசாயிகள் கூட்டமைப்பு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.வத்தலக்குண்டுவில் தமிழக விவசாயிகள் கூட்டமைப்பு கூட்டம் நடந்தது. மாநில பொதுச் செயலாளர் இளங்கோவன் தலைமை வகித்தார். மாநில பொருளாளர் சரவணன், சட்ட ஆலோசகர் பழனிக்குமார் முன்னிலை வகித்தார்.கூட்டத்தில் தமிழகத்தின் பல பகுதிகளில் விவசாயத்திற்கு போதிய தண்ணீர் இல்லை. கோடைகாலம் வரும் நிலையில் தண்ணீர் பிரச்னை மேலும் அதிகரிக்கும். தண்ணீர் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு நதிகளை இணைப்பதுதான். ஆகையால் தமிழக பட்ஜெட்டில் நதிநீர் இணைப்புக்கு நிதி ஒதுக்கப்படும் என்று எதிர்பார்த்தோம். ஆனால் எதுவும் ஒதுக்கப்படவில்லை. இதனால் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர். தமிழக அரசு காவிரி டெல்டா மாவட்டங்களை வேளாண் பாதுகாப்பு மண்டலமாக அறிவித்தது பாராட்டுக்குரியது. அதேநேரம் தமிழகத்தில் உள்ள மற்ற பகுதி விவசாயிகளையும் கருத்தில் கொண்டு நதிநீர் இணைப்பை இனியாவது நிறைவேற்ற வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.இதில் பொன்னம்பலம், பொன்னுச்சாமி, செல்வக்குமார், மொக்கராசு, போஸ், ரமேஷ், தர்மலிங்கம், பெருமாள் உள்பட பலர் கலந்து கொண்டனர். இளைஞரணி செயலாளர் தங்கப்பாண்டி நன்றி கூறினார்.




Tags : Resident Farmers Meeting ,Tamil Nadu ,
× RELATED சுதந்திர போராட்டம் குறித்த பழங்கால...