கடத்தூரில் காசநோய் விழிப்புணர்வு பேரணி

தர்மபுரி, பிப்.19:  கடத்தூர் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில், தேசிய காசநோய் ஒழிப்பு  திட்டத்தின் கீழ், காசநோய் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடந்தது. இப்பேரணியை  மாவட்ட காசநோய் மைய துணை இயக்குநர் (பொ) டாக்டர் கணேஷ்குமார், டாக்டர்  கணல்வேந்தன் ஆகியோர் கொடியசைத்து துவக்கி வைத்தனர். இப்பேரணி பள்ளி  வளாகத்தில் தொடங்கி பேருந்து நிலையம், காவல் நிலையம் வழியாக மீண்டும்  பள்ளியில் நிறைவடைந்தது. இந்நிகழ்ச்சியில் பள்ளியின் ஆசிரியை சங்கீதா,  சிகிச்சை ஒருங்கிணைப்பாளார்கள் ஜெயந்தி, கிருபா, குணசேகரன், செல்வராஜ்,  மேற்பார்வையாளர்கள் சுப்ரமணி, சேகர், கார்த்தி, அருளானந்தம் உள்ளிட்டோர்  கலந்து கொண்டனர். நிகழ்ச்சியை  தர்மபுரி மாவட்ட காசநோய் மையம் ஏற்பாடு  செய்திருந்தது.

Related Stories:

>