நுங்கம்பாக்கம், சூளைமேடு பகுதியில் தொடர் கைவரிசை பல லட்சம் மதிப்புள்ள கார்களை திருடி நெல்லையில் சில ஆயிரத்துக்கு விற்பனை

சென்னை, பிப். 19: பல லட்சம் மதிப்புள்ள கார், பைக்குகளை திருடி வந்த நெல்லை வாலிபரை போலீசார் கைது செய்தனர். திருடிய வாகனங்களை குறைந்த விலைக்கு விற்பனை செய்து அந்த பணத்தில் இளம் பெண்களுடன் உல்லாசமாக இருந்து வந்ததும் விசாரணையில் அம்பலமாகி உள்ளது.

சென்னை நுங்கம்பாக்கம், சூளைமேடு பகுதிகளில் சாலையோரம் நிறுத்தப்படும் கார் மற்றும் புல்லட்டுகள் மட்டும் மாயமாகி வந்தது. இதுகுறித்து நுங்கம்பாக்கம் மற்றும் சூளைமேடு போலீசாருக்கு தொடர் புகார்கள் வந்தன. அதைதொடர்ந்து நுங்கம்பாக்கம் உதவி கமிஷனர் முத்துவேல்பாண்டி உத்தரவுப்படி சூளைமேடு குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.இவர்கள் வாகனங்கள் திருடுபோன பகுதியில் உள்ள சிசிடிவி பதிவு காட்சிகளை வைத்து குற்றவாளியை தேடி வந்தனர். இதற்கிடையே, ேநற்று காலை சூளைமேடு பகுதியில் தனிப்படை போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது புல்லட்டில் வந்த வாலிபர் ஒருவரை மடக்கி வாகனத்திற்கான ஆவணங்களை கேட்டனர். அப்போது அந்த வாலிபர் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்ததால் சந்தேகமடைந்த தனிப்படை போலீசார் வாலிபரை பிடித்து விசாரணை நடத்தினர்.

அப்போது அவர் ஓட்டி வந்த புல்லட் திருடியது என தெரியவந்தது.போலீசாரின் தீவிர விசாரணையில், திருநெல்வேலி மாவட்டம் களக்காடு பகுதியை சேர்ந்த பட்டதாரி கொம்பையா (23) என்பதும், இவர் நுங்கம்பாக்கம், சூளைமேடு, அமைந்தகரை, எம்எம்டிஏ காலனி பகுதிகளில் நள்ளிரவில் நோட்டமிட்டு கார் மற்றும் புல்லட் பைக்குகளை மட்டும் திருடி வந்ததும் தெரியவந்தது. திருடிய கார் மற்றும் புல்லட்டுகளை திருநெல்வேலிக்கு எடுத்து சென்று புல்லட் 50 ஆயிரம் முதல் ₹80 ஆயிரம் வரை போலி ஆர்சி புக் தயாரித்து விற்பனை ெசய்து வந்தது தெரியவந்தது.

மேலும், திருடிய கார்களை 1.20 லட்சம் முதல் ₹2 லட்சம் வரை விற்பனை செய்து வந்துள்ளார். திருடிய வாகனங்களை விற்பனை செய்து அதில் கிடைக்கும் பணத்தை வைத்து கொம்பையா இளம்பெண்களுடன் உல்லாசமாகவும், நண்பர்களுடன் மது அருந்தி சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வந்தது தெரியவந்தது. அதைதொடர்ந்து தனிப்படை போலீசார் கொம்பையாவை கைது செய்து 6 கார்கள், 6 புதிய புல்லட் பைக்குகளை பறிமுதல் செய்தனர்.

Related Stories:

>