×

கேத்தி மலை பகுதியில் காட்டு தீ புற்கள், செடிகள் எரிந்து சாம்பல்

ஊட்டி, பிப். 19:கேத்தி மலைப் பகுதியில் காட்டு தீ ஏற்பட்டதால், பல ஏக்கர் பரப்பளவிலான புற்கள்,  செடிகள் எரிந்து சாம்பலாகின. ஊட்டி அருகேயுள்ள கேத்தி பகுதியில் உள்ள மலைகளில் புற்கள், சிறிய செடி கொடிகள் காய்ந்துள்ளன. இந்நிலையில், நேற்று கேத்தி பகுதியில் உள்ள மலையில் காட்டு தீ ஏற்பட்டது. இதனால், பல ஏக்கர் பரப்பில் உள்ள புற்கள் மற்றும் சிறிய செடிகள் எரிந்து சாம்பலாகின. காட்டு தீ பராவாமல் தடுக்கும் முயற்சியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர். இது போன்ற பல இடங்களிலும் தற்போது வனங்கள் மற்றும் புற்கள் காய்ந்து போய் உள்ளதால், காட்டு தீ ஏற்படும் அச்சம் உள்ளது. காட்டு தீ ஏற்பட்டால், அதனை உடனுக்குடன் கட்டுப்படுத்துவது குறித்து வனத்துறையினர் ஆலோசித்து வருகின்றனர்.

Tags : forest fires ,plants ,Kathy Mountains ,
× RELATED அனல் மின் நிலைய தேவைக்காக ஒடிசாவில்...