×

விவேகானந்தா கல்லூரியில் கைவினை பொருட்கள் தயாரிப்பு பயிற்சி முகாம்

திருச்செங்கோடு, பிப்.17: திருச்செங்கோடு எளையாம்பாளையம் விவேகானந்தா கல்வி குழுமத்தின் அங்கமான, ரபீந்திரநாத் தாகூர் மகளிர் கல்வியியல் கல்லூரி மற்றும் விஸ்வபாரதி மகளிர் கல்வியியல் கல்லூரிகள் சார்பாக “கலை மற்றும் கைவினைப்பொருட்கள் ஒருநாள் பயிற்சி முகாம் நடந்தது. விவேகானந்தா கல்வி நிறுவனங்களின் தாளாளர் மற்றும் செயலாளர் கருணாநிதி, முகாமிற்கு தலைமை வகித்து ெதாடங்கி வைத்தார். மேலாண் இயக்குனர் கிருஷ்ணவேணி குத்துவிளக்கேற்றி வைத்தார். விஸ்வபாரதி மகளிர் கல்வியியல் கல்லூரி முதல்வர் ஆரோக்கியசாமி  வரவேற்றார். ரபீந்திரநாத் தாகூர் மகளிர் கல்வியியல் கல்லூரி முதல்வர் பரிமளா வாழ்த்தி பேசினார்.

சிறப்பு விருந்தினராக பாளையங்கோட்டை  தூய சவேரியார் கல்வியியல் கல்லூரியின் கலை மற்றும் கைத்தொழில் பயிற்றுநர், ஸ்டாலின் மற்றும் ஓவியர் அரிராஜ் கலந்துகொண்டு கலை மற்றும் கைவினைப்பொருட்களின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தனர். முகாமில், பழைய பொருட்கள் மற்றும் தேவையில்லாத பாட்டில், வளையல், சிடி ஆகியவற்றைக் கொண்டு  கலைப்பொருட்கள் தயாரிப்பது குறித்து பயிற்சி தரப்பட்டது. நீலம், பன்னீர், ஒமவாட்டர், ரோஸ்மில்க், ஊதுபத்தி தயாரித்தல் பற்றி கற்பிக்கப்பட்டது. பேராசிரியர்கள் முருகேசன், பொன்னுசாமி, கலாமணி, ஆனந்தி, கலைச்செல்வன், புஷ்பா, கோகிலா மற்றும் மணிவேல் ஆகியோர் பங்கேற்றனர். பொன்னுசாமி நன்றி கூறினார்.

Tags : Handicrafts Manufacturing Training Camp ,Vivekananda College ,
× RELATED கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில்...