×

கடன் தொல்லையால் ஓட்டல் அதிபர் தற்கொலை

சேந்தமங்கலம், ஏப்.25: நாமக்கல் மாவட்டம், எருமப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் ரவி(45). இவர் அங்குள்ள 5 ரோடு பகுதியில் ஓட்டல் நடத்தி வந்தார். இவரது மனைவி அமுதா. இவர்களுக்கு 2 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால், ரவி அதிகளவில் கடன் வாங்கி, ஓட்டலை நடத்தி வந்துள்ளார். ஆனால், கடனை திரும்ப கட்ட முடியாமல், சிரமப்பட்டு வந்துள்ளார். இதனிடையே, கடன் கொடுத்தவர்கள் பணத்தை கேட்டு, ரவிக்கு நெருக்கடி கொடுத்து வந்ததாக தெரியவருகிறது. இதனால், மனவேதனையடைந்த ரவி, நேற்று முன்தினம் இரவு, வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். நேற்று காலை, அவர் தூக்கில் சடலமாக தொங்கியதை கண்டு குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்தனர். தகவல் அறிந்து எருமப்பட்டி போலீசார், சம்பவ இடம் விரைந்து சென்று சடலத்தை கைப்பற்றினர்.பின்னர், பிரேத பரிசோதனைக்காக நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

The post கடன் தொல்லையால் ஓட்டல் அதிபர் தற்கொலை appeared first on Dinakaran.

Tags : Senthamangalam ,Ravi ,Erumapatti ,Namakkal district ,Amuda ,Dinakaran ,
× RELATED பெண்ணிடம் நகை பறித்த வழக்கில் பாஜ பிரமுகருக்கு 3 ஆண்டு சிறை