×

வீரபாண்டி ஒன்றியத்தில் தென்னை சாகுபடி கருத்தரங்கம்

ஆட்டையாம்பட்டி, பிப்.17: வீரபாண்டி ஒன்றியத்தில் தென்னை சாகுபடி குறித்த கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் விவசாயிகள் கலந்து கொண்டனர்
வீரபாண்டி ஒன்றியத்தில், தென்னை சாகுபடி தொழில்நுட்பங்கள் மற்றும் மதிப்பு கூட்டுதல் குறித்த கருத்தரங்கு, பைரோஜி களஞ்சியம் உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தில் நடைபெற்றது. வேளாண்மை உதவி இயக்குனர் நாகபசுபதி வரவேற்று, தென்னை சாகுபடியின் முக்கியத்துவம் மற்றும் மதிப்பு கூட்டுதலால் ஏற்படும் பயன்கள் குறித்து பேசினார். வேளாண்மை இணை இயக்குனர் (பொ) பன்னீர்செல்வம் தலைமை தாங்கி, தென்னை பயிர் காப்பீடு செய்வது பற்றியும், வளர்ந்த தென்னை தோப்புகளை பராமரித்தல், குரும்பை உதிர்தல், மற்றும் பென்சில் முனை குறைபாடு நிவர்த்தி பற்றி எடுத்துரைத்தார்.
வேளாண்மை அலுவலர் கார்த்திகாயினி, பிரதம மந்திரி பென்சன் திட்டம், விவசாயிகள் ஆதார நிதி திட்டங்கள் குறித்தும், வேளாண் அறிவியல் நிலைய தொழில்நுட்ப உதவியாளர்கள் செந்தில்நாதன், தென்னை சாகுபடி தொழில் நுட்பங்கள் குறித்தும், சுகன்யாதேவி தென்னையை தாக்கும் பூச்சிகள் குறித்து பேசினர். கருத்தரங்கில் துணை வேளாண்மை அலுவலர் சீனிவாசன், வட்டார தொழில்நுட்ப மேலாளர் ராஜேந்திரன், உதவி வேளாண் அலுவலர் சிவசங்கர், முருகன், கார்த்திகேயன், தனபால், பழனிசாமி, தினேஷ் மற்றும் உதவி தொழில்நுட்ப மேலாளர் தீபன்முத்துசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Tags : Coconut Cultivation Seminar ,Veerapandi Union ,
× RELATED திமுக ஒன்றிய செயலாளரை மிரட்டிய மாஜி எம்.எல்.ஏ.,: போலீஸ் கமிஷனரிடம் புகார்