×

மகுடஞ்சாவடியில் வேலைவாய்ப்பு முகாம்

இளம்பிள்ளை, பிப்.17: மகுடஞ்சாவடியில், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் சார்பில், மாவட்ட அளவிலான வேலை வாய்ப்பு முகாம் நேற்று நடைபெற்றது. முகாமில் தனியார் வங்கிகள், கல்லூரிகள், மோட்டார் வாகன கம்பெனிகள் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட பல்வேறு நிறுவனங்கள் கலந்து கொண்டன. முகாமினை மகுடஞ்சாவடி ஒன்றிய குழுத்தலைவர் லலிதா குத்துவிளக்கு ஏற்றி துவக்கிவைத்தார். முகாமில் சங்ககிரி எம்எல்ஏ ராஜா கலந்து கொண்டு 800 நபர்களுக்கான வேலைவாய்ப்புக்கான பணி ஆணை வழங்கினார். சேலம் மாவட்ட மகளிர் திட்ட இயக்குனர் செல்வக்குமார், உதவித்திட்ட அலுவலர்கள் சுந்தர், விஜயகுமார், மகுடஞ்சாவடி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வெங்கடேசன், செல்வராஜ், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் தேன்மொழி, கூட்டுறவு சங்கத் தலைவர் நாகராஜ், வட்டார வள மைய அலுவலர்கள்  உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Employment Camp ,Makutanjavadi ,
× RELATED மாவட்ட கலெக்டர் ஆபீசில் மாற்றுத்திறனாளிகளுக்கு வேலை வாய்ப்பு முகாம்