×

போலீசாரை கண்டித்து கடையடைப்பு போராட்டம்

சாத்தூர்,பிப்.13: சாத்தூர் அருகே ஏழாயிரம்பண்ணை கிராமத்தில் போலீசாரை கண்டித்து கடைகளை அடைத்து மக்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர். சாத்தூர் அருகே சிவசங்குபட்டி கிராமத்தை சேர்ந்தவர் அப்பாவு மகன் சிவானந்தம்(28). கடந்த 5ம் தேதி சிவசங்குபட்டி முக்குரோடு அருகே இவர் டூவீலரில் சென்றார். அப்போது ஏழாயிரம்பண்ணை காவல்நிலையத்தை சேர்ந்த ஐந்துக்கும் மேற்பட்ட போலீசார் வாகனச்சோதனையில் இருந்துள்ளனர். அவர்களை பார்த்ததும் சிவானந்தம் வாகனத்தை நிறுத்தாமல் சென்றுள்ளார்.

அவரை போலீசார் விரட்டிச் சென்ற போது சிவானந்தம் கீழே விழுந்தார். அவரை காவல்நிலையம் அழைத்து சென்ற எஸ்.ஐ ராமசாமி மற்றும் போலீசார் சரமாரியாக தாக்கியுள்ளனர். அதில் படுகாயம் அடைந்த சிவானந்தம் விருதுநகர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரை தாக்கிய எஸ்.ஐ மற்றும் போலீசாரை மாற்றக்கோரி சிவசங்குபட்டி, ஏழாயிரம்பண்ணை கிராமமக்கள் கடைகளை அடைத்து ஆர்ப்பாட்டம் செய்தனர்.
இதில் கிராமமக்களுக்கு ஆதரவாக பல்வேறு அமைப்பினர்கள் மற்றும் அகில இந்திய பசும்பொன் முன்னேற்ற கழக நிர்வாகிகள் ரஞ்சித்பாண்டியன், கணேசன் கலந்து கொண்டனர். அப்போது அங்கு வந்த சாத்தூர் எம்எல்ஏ எம்.எஸ்.ஆர்.ராஜவர்மன், சிவானந்தத்தை தாக்கிய போலீசாரை மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார். அத்துடன் சிவானந்தம் குடும்பத்திற்கு ஆறுதல் தெரிவித்தார்.

Tags : Shoplifting protest ,
× RELATED கோவை மாவட்டத்தில் குடியுரிமை சட்டத்...