×

வட்டார அளவிலான இளையோர் மாநாடு

தேனி, பிப். 13: தேனி வட்டார அளவிலான இளையோர் மன்ற வளர்ச்சி மாநாடு தேனி நேரு யுவகேந்திரா சார்பில் தேனி பொம்மையக்கவுண்டன் பட்டியில் நடந்தது. மாநாட்டிற்கு தேனி நேரு யுவகேந்திரா மாவட்ட இளைஞர் ஒருங்கிணைப்பாளர் அஸ்வின்வினோதன் தலைமை வகித்தார். ஜீவரத்தினம் முன்னிலை வகித்தார். விஜய்நாத் வரவேற்றார். இதில் மாவட்ட தொழில்மைய பொது மேலாளர் ராமசுப்பிரமணியன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் தூய்மை இந்தியா திட்ட மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பேயத்தேவன், கம்மவார் சங்க பாலிடெக்னிக் கல்லூரி என்எஸ்எஸ் திட்ட அலுவலர் செல்வக்குமார், பொதுநல சேவை மையத்தை சேர்ந்த பழனிராஜ், நாகேந்திரமணி ஆகியோர் பேசினர். முடிவில் நேரு யுவகேந்திராவை சேர்ந்த நந்தகுமார் நன்றி தெரிவித்தார்.

Tags : Youth Conference ,
× RELATED சலவை, மண்பாண்டம், சவரத் தொழிலாளர்கள்...