×

அரூர் அரசு பள்ளியை சேர்ந்த மாற்றுத்திறனாளி மாணவர்கள் மாநில போட்டிக்கு தேர்வு

அரூர், பிப்.12: அரூர் அரசு பள்ளியை சேர்ந்த மாற்றுத்திறனாளி மாணவர்கள், மாநில அளவிலான விளையாட்டு போட்டிக்கு தேர்வாகியுள்ளனர். தர்மபுரி மாவட்ட அளவிலான மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டு போட்டி  மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நடந்தது. இப்போட்டியில் சுமார் 200 மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். இப்போட்டியில், அரூர் அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர். இதில்,  
9ம் வகுப்பு மாணவன் முருகன் குண்டு எறிதல் போட்டியில் முதலிடமும், 50மீட்டர் ஓட்டத்தில் 3ம் இடமும் பிடித்தார். பார்த்தீபன் என்ற மாணவன், 100 மீட்டர் ஓட்டத்தில் முதலிடமும், ஜமாலுதீன் டென்னிஸ் பந்து எறிதல் 2ம் இடமும், 25மீட்டர் ஓட்டத்தில் 2ம் இடமும் பிடித்தனர்.

டேபில் டென்னீஸ் போட்டியில் முருகன், பார்த்தீபன் முதலிடம் பெற்று பெற்று சாதனை படைத்துள்ளனர். முதலிடம், 2ம் இடம் பிடித்த மாணவர்கள், மாநில போட்டியில் விளையாட தேர்வு பெற்றுள்ளனர். மாநில போட்டிக்கு தேர்வான மாணவர்களையும், பயிற்சி அளித்த உடற்கல்வி துறை ஆசிரியர்கள் பழனிதுரை, சங்கர், முருகேசன், வெங்கடாசலம் ஆகியோரை, அரூர் கல்வி அலுவலர் பொன்முடி, பள்ளி தலைமை ஆசிரியர் குழந்தை வேலு மற்றும் ஆசிரியர்கள்
பாராட்டி நினைவு பரிசு வழங்கி வாழ்த்து தெரிவித்தனர்.

Tags : Transfer students ,state competition ,Aroor Government School ,
× RELATED அழகப்பா மெட்ரிக் பள்ளி மாநில போட்டிக்கு தேர்வு