×

நஞ்சுண்டேஸ்வரர் கோயிலில் இன்று கும்பாபிஷேகம்

தர்மபுரி, பிப்.12: தர்மபுரி டவுன் குப்பாகவுண்டர் தெரு ஆத்துமேடு சர்வாங்க சுந்தரி சமேத ஸ்ரீ நஞ்சுண்டேஸ்வரர் கோயிலில் இன்று(12ம் தேதி) கும்பாபிஷேகம் நடக்கிறது. தர்மபுரி டவுன் குப்பாகவுண்டர் தெரு ஆத்துமேடு சர்வாங்க சுந்தரி சமேத ஸ்ரீ நஞ்சுண்டேஸ்வரர் கோயிலில் கும்பாபிஷேக விழா, கடந்த 5ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. நேற்று புதிய மூர்த்திகள், பரிவார தேவதைகள் கரிகோலம் மற்றும் தீர்த்தக்குடம், பால்குடம், முளைப்பாலிகளை அழைத்து மேளம், பம்பை வாத்தியங்களுடன் ஊர்வலம் நடந்தது. மாலை 7 மணிக்கு சங்கல்பம் நடந்தது. இதை ெதாடர்ந்து சாந்தி ஹோமம், பிரவேச பலிபூஜை நடந்தது. இரவு 9 மணிக்கு யந்திரஸ்தாபனம், மருந்து சாற்றுதல் நடந்தது. இன்று (12ம் தேதி) காலை 7 மணிக்கு 2ம் கால பூஜை, நாடிசந்தானம், தனஹோமம் நடக்கிறது. காலை 9.30 மணிக்கு யாத்ரா தானம், திருக்குடம் புறப்பாடு, சக்தி கலசங்கள் ஆலயம் வலம் வருதல், நஞ்சுண்டேஸ்வரர் விமான கோபுரம், முலவர், பரிவார தேவதைகளுக்கு மகாகும்பாபிஷேகம் நடக்கிறது. இதில் கலந்து கொள்ளும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்துள்ளனர்.

Tags : Kumbabishekam ,Nanjundeswarar Temple ,
× RELATED பெரியபாளையம் பவானி அம்மன் ஆலயத்தில்...