×

தேன்கனிக்கோட்டையில் பீன்ஸ் விலை வீழ்ச்சி

தேன்கனிக்கோட்டை, பிப்.12: தேன்கனிக்கோட்டையில் பீன்ஸ் விலை வீழ்ச்சியடைந்ததால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். தேன்கனிக்கோட்டை, தளி, அஞ்செட்டி, கெலமங்கலம் பகுதியில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் விவசாயிகள் பீன்ஸ் பயிரிட்டுள்ளனர். கடந்த சில மாதங்களாக நிலவிய கடும் பனிப்பொழிவால் பீன்ஸ் விளைச்சல் பாதிக்கப்பட்டு கிலோ ₹30க்கு விற்பனையானது. தற்போது வெயில் சற்று அதிகரித்துள்ளதையடுத்து, பீன்ஸ் அமோக விளைச்சலை கொடுத்துள்ளது. இதனால், மார்க்கெட்டுக்கு பீன்ஸ் வரத்து அதிகரித்தது. இந்நிலையில், கிலோ ₹7க்கு விற்பனை செய்யப்பட்டது. கடந்த மாதம் கிலோ ₹30க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், நடப்பு வாரம் விலை வீழ்ச்சியடைந்துள்ளதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

Tags :
× RELATED திரவுபதியம்மன் கோயில் கும்பாபிஷேக பெருவிழா