×

ஒரத்தநாடு அருகே அதிமுக, அமமுக கட்சியிலிருந்து 200 பேர் திமுகவில் இணைந்தனர்

ஒரத்தநாடு, பிப்.12: ஒரத்தநாடு ஒன்றியம் கண்ணந்தங்குடி மேலையூர் கிராமத்தில் அதிமுக, அமமுக கட்சிகளிலிருந்து விலகி 200 பேர் திமுகவில் இணைந்தனர். தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கண்ணந்தங்குடி மேலையூர் கிராமத்தைச் சேர்ந்த முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவரும், அமமுக நிர்வாகி சண்முகம் தலைமையில் அதிமுக மற்றும் அமமுக தொண்டர்கள் சுமார் 200 பேர் திமுகவில் இணையும் விழா ஒரத்தநாடு ஒன்றிய கழக வளாகத்தில் நடந்தது. விழாவுக்கு ஒன்றிய செயலாளர் காந்தி தலைமை வகித்தார். தஞ்சை மாவட்ட திமுக செயலாளரும், எம்எல்ஏவுமான துரை சந்திரசேகரன் கலந்துகொண்டு திமுகவில் இணைந்த அனைவருக்கும் சால்வை அணிவித்து பாராட்டி வாழ்த்தி பேசினார்.

அப்போது அவர் பேசியதாவது ஒரத்தநாட்டிற்கு பெருமை சேர்த்த எல்.கணேசன் மொழிப்போர் தளபதியாகவும், பேரறிஞர் அண்ணா, கலைஞர் ஆகியோருக்கு நண்பராகவும் இருந்து அரசியல் களத்தில் வெற்றி பெற்றவர். பேரறிஞர் அண்ணாவுடன் விவாதம் செய்து வெற்றி பெற்ற ஒரே தலைவர் எல்.கணேசன். அவரது சொந்த ஊரில் இருந்து இப்பொழுது திமுகழகத்திற்கு 200 பேர் வந்திருப்பதில் பெருமகிழ்ச்சி. மேலும் கழகம் வலுவோடு உயர்ந்திட இன்று இணைந்து இருக்கிற இளைஞர்கள் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சண்முகம் தலைமையில் பாடுபட வேண்டும் என்று மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன் என்றார். இந்த இணைப்பு விழாவில் திமுக நிர்வாகிகள் உள்ளாட்சி பிரதிநிதிகள் திரளாக கலந்து கொண்டனர்.

Tags : AIADMK ,DMK ,Ottanadu ,party ,
× RELATED அதிமுக முன்னாள் அமைச்சர் பொன்னையன் மனைவியிடம் மோசடி முயற்சி