×

குடியுரிமை திருத்த சட்ட மசோதாவை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும்

பாடாலூர், பிப். 12: வரும் 22ம் தேதி விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தலைமையில் நடைபெறும் தேசம் காப்போம் பேரணி குறித்து பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் ஒருங்கிணைந்த ஒன்றிய செயற்குழு கூட்டம் ஆலத்தூர் கிராமத்தில் நடந்தது. ஒன்றிய ஒருங்கிணைப்பாளர் (மேற்கு) கதிர்வாணன் தலைமை வகித்தார். மாவட்ட துணை அமைப்பாளர் நித்தியவளவன் வரவேற்றார். ஒருங்கிணைப்பாளர்கள் மாவட்ட செயலாளர் தமிழ்மாணிக்கம், நாடாளுமன்ற தொகுதி துணை செயலாளர் மன்னர்மன்னன், பொருளாளர் கலையரசன், ஒன்றிய செயலாளர் (கி) இளமாறன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக மேலிட ஒருங்கிணைப்பாளரும், மண்டல செயலாளருமான கிட்டு, மாநில செயலாளர் செங்கோலன், மாவட்ட துணை செயலாளர் கிருஷ்ணகுமார், வக்கீல் ஸ்டாலின், மாவட்ட செய்தி தொடர்பாளர் உதயகுமார் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

கூட்டத்தில் வரும் 22ம் தேதி திருச்சியில் கட்சி தலைவர் திருமாவளவன் தலைமையில் நடைபெறும் தேசம் காப்போம் பேரணிக்கு ஆலத்தூர் ஒருங்கிணைந்த ஒன்றியத்தில் இருந்து 40 வாகனங்களில் கலந்து கொள்வது. மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்த சட்டத்தை மத்திய அரசு உடனே திரும்ப பெற வேண்டும். தமிழக அரசு உடனடியாக சிறப்பு சட்டமன்ற கூட்டத்தை நடத்தி குடியுரிமை திருத்த சட்டத்தை தமிழகத்தில் நடைமுறைபடுத்த மாட்டோம் என்று சிறப்பு தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். நாளை பெரம்பலூரில் திருமாவளவன் தலைமையில் நடைபெற உள்ள பெரம்பலூர், அரியலூர், கரூர், புதுக்கோட்டை, தஞ்சை, நாகை, திருவாரூர், ஆகிய மாவட்டங்கள் உள்ளடங்கிய மண்டல செயற்குழு கூட்டத்துக்கு ஆலத்தூர் ஒன்றியத்துக்கு உள்ளடங்கிய மாவட்ட, மாநில, ஒன்றிய, நகர,

பேரூர் பொறுப்பாளர்கள் கலந்து கொள்வது. ஆலத்தூர் பகுதியில் சின்ன வெங்காயத்துக்கு முறையான விலை நிர்ணயம் செய்து விவசாயிகளை பாதுகாக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் மாவட்ட, ஒன்றிய, கிளை நிர்வாகிகள் பங்கேற்றனர். மாவட்ட அமைப்பாளர் அழகேசன் நன்றி கூறினார்.

Tags : Federal Government ,
× RELATED டெல்லியில் மீண்டும் போராட்டம் நடத்த...