×

கூட்டுறவு சங்கங்களில் பணிபுரியும் பணியாளர்களுக்கு அஞ்சல் வழி கூட்டுறவு மேலாண்மை பட்டயபயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம் இணைப்பதிவாளர் தகவல்

திருவண்ணாமலை, பிப்.11: திருவண்ணாமலை மாவட்டத்தில் கூட்டுறவு சங்கங்களில் பணிபுரியும் பணியாளர்களுக்கு 21வது அஞ்சல் வழி கூட்டுறவு மேலாண்மை பட்டய பயிற்சிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக இணைப்பதிவாளர் தெரிவித்துள்ளார். திருவண்ணாமலை கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் வே.நந்தகுமார் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: திருவண்ணாமலை மாவட்டத்தில் திருவண்ணாமலை கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் 21வது அஞ்சல் வழி கூட்டுறவு மேலாண்மை பட்டயப்பயிற்சி கூட்டுறவு சங்கங்களின் மாநில பதிவாளரின் அறிவுரைப்படி திருவண்ணாமலை கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் கடந்த 5ம் தேதி முதல் விண்ணப்பங்கள் விநியோகிக்கப்படுகிறது. இக்கூட்டுறவு மேலாண்மை பட்டயப்பயிற்சி வகுப்பில் சேருவதற்கு தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள், பொது விநியோக திட்டத்தில் பணிபுரியும் விற்பனையாளர்கள் மற்றும் கட்டுனர்கள், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி, கூட்டுறவு சர்க்கரை ஆலை, கைத்தறி நெசவாளர்கள் சங்கம், கூட்டுறவு வீட்டு வசதி சங்கம், கால்நடை பராமரிப்பு துறை சங்கம், பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கம் (ஆவின்) மற்றும் இதர கூட்டுறவு சங்கங்களில் பணியாற்றும் பணியாளர்கள், இப்பயிற்சி பெறாத பணியாளர்கள் சேரலாம். இதில் சேருவதற்கு 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். திருவண்ணாமலை கூட்டுறவு மேலாண்மை அஞ்சல் வழி பட்டய பயிற்சி படிக்க விண்ணப்ப தொகை ₹100 செலுத்தி திருவண்ணாமலை- திண்டிவனம் சாலையில் உள்ள திருவண்ணாமலை கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் விண்ணப்பித்தை பெற்று, மார்ச் 6ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.

Tags :
× RELATED வேன் தலைகீழாக கவிழ்ந்து 10 பேர் காயம் சேத்துப்பட்டு மாதாமலையில்