×

மத்திய அரசின் பட்ஜெட்டை கண்டித்து ஆட்ேடா ஓட்டுனர்கள் ஆர்ப்பாட்டம்

பெரம்பலூர்,பிப்.11: பெரம்ப லூரில் பாஜக அரசின் பட் ஜெட்டைக் கண்டித்தும் தற் கொலை முயற்சி செய்த ஆட்டோ டிரைவர் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்கக் கோரியும், அனைத்து ஆட் டோ ஓட்டுனர்கள் சங்கம் சார்பாகக் கண்டன ஆர்ப் பாட்டம் நடைபெற்றது. பெரம்பலூரில் பாஜக அர சின் பட்ஜெட்டை கண்டித் தும், மின் கம்பியைப் பிடித் துத் தற்கொலை முயற்சி செய்த ஆட்டோ டிரைவர் அரிச்சந்திரன் குடும்பத்திற்கு இழப்பீடுவழங்கக் கோரியும், அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கக்கோரியும், சம்பவத்திற்கு காரணமான அதிகாரிகள்மீது தகுந்த நட வடிக்கை எடுக்கக்கோரி யும், அனைத்து ஆட்டோ ஓட்டுனர்கள் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் பழைய பஸ் ஸ்டாண்ட் காந்திசிலை முன்பு நேற்றுமாலை நடை பெற்றது.

பெரம்பலூர் மாவட்ட சிஐடியு 3+1ஆட்டோ மற்றும் அ னைத்து வகையான வாக ன ஓட்டுநர்கள் தொழிலா ளர் சங்கம் சார்பாக நடை பெற்ற இந்தக்கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட துணைச் செயலா ளர் மல்லீஸ்குமார் தலை மை வகித்தார். மாவட்டச் செயலாளர் ரங்கநாதன் மாவட்டத் தலைவர் சண்மு கம், மாவட்ட பொருளாளர் சிவசங்கர், மாவட்ட துணை செயலாளர் பெரியசாமி, சிஐடியு மாவட்டக் குழுவை சேர்ந்த அழகேசன், செல்வ க்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.சிஐடியு பெரம்பலூர் மாவ ட்டத் தலைவர் அகஸ்டின், மாவட்டச்செயலாளர் துரை சாமி ஆகியோர் கண்டன உரைபேசினர். ஆர்ப்பாட்ட த்தில் மாவட்ட நிர்வாகிகள் ரங்கராஜ், பன்னீர்செல் வம், செல்லதுரை, ஆட்டோ சங்க கிளைத்தலைவர் தர்மராஜ் மற்றும் சாலையோர வியாபாரிகள் மற்றும் விற் பனையாளர்சங்கம், அனை த்து வகையான கட்டுமான மற்றும் உடலுழைப்புத் தொ ழிலாளர்கள் சங்கம், பல் வேறு பகுதிகளைச் சேர்ந்த ஆட்டோ சங்கத்தினர் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.

Tags : drivers ,Atta ,government ,
× RELATED இலங்கை சிறையில் அடைக்கப்பட்டிருந்த 3 படகு ஓட்டுநர்கள் விடுதலை