×

காய்கறி சந்தையை இடிக்க எதிர்ப்பு வியாபாரிகள் உண்ணாவிரத போராட்டம்

திருப்பூர், பிப்.11:திருப்பூர் ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்காக பழைய பஸ் ஸ்டாண்ட் முன் உள்ள மாநகராட்சிக்கு சொந்தமான தினசரி  காய்கறிகள் விற்பனை செய்யும் வணிக வளாக கடைகளை இடிக்க காய்கறி கடை வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்து நேற்று  உண்ணாவிரத போராட்டம் நடந்தது.திருப்பூர் மாநகராட்சிக்கு சொந்தமான தினசரி காய்கறி சந்தை  பழைய பஸ் ஸ்டாண்ட் முன் கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாக செயல்படுகிறது.இதில், காய்கறிகள், மளிகை பொருட்கள், பூ வியாபாரம், பழ வியாபாரம், இறைச்சிக்கடைகள், பேக்கரிகள் என 450 க்கு மேற்பட்ட வியாபாரிகள் கடை நடத்தி வருகின்றனர். இந்நிலையி–்ல், மாநகராட்சி பகுதிகளில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்காக பல்வேறு பகுதிகளில் வளர்ச்சி பணிகள் நடந்து வருகிறது. பழைய பஸ் ஸ்டாண்ட் முன் உள்ள காய்கறி கடைகளை இடித்து அடுக்குமாடி வணிக வளாகம் கட்ட திட்டம் வரையறுக்கப்பட்டு கடந்த 2 ஆண்டுக்கு முன்பே மாநகராட்சி நிர்வாகம் அனைத்து காய்கறி கடை வியாபாரிகளுக்கும் நோட்டீஸ் வினியோகிக்கப்பட்டது.தற்போது பணிகள் தொடங்குவதற்காக காய்கறி சந்தையில் உள்ள கடைகளை அகற்றும் முயற்சியில் மாநகராட்சி நிர்வாகம் ஈடுபட்டுள்ளது. இதை கண்டித்து அனைத்து காய்கறி கடை வியாபாரிகள் சங்கத்தின் சார்பில் கடையடைப்பு மற்றும் உண்ணாவிரத போராட்டம் நேற்று நடந்தது.உண்ணாவிரத போராட்டத்திற்கு காய்கறிச் சந்தை வியாபாரிகள் சங்கத்தின் தலைவர் பாலசுப்ரமணியம் தலைமை வகித்தார். தங்கமுத்து முன்னிலை வைத்தார். இதில் காய்கறி தினசரி சந்தையில் உள்ள அனைத்து கடை வியாபாரிகள் கலந்து கொண்டனர். உண்ணாவிரதப் போராட்டம் மாலை 6 மணிக்கு முடிந்தது. உண்ணாவிரத போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர். இது குறித்து காய்கறி கடை வியாபாரிகள் சங்கத்தின் தலைவர் பாலசுப்ரமணியன் கூறியதாவது. ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்காக காய்கறி சந்தையை அடுக்குமாடி கட்டிடமாக  மாற்றும் முயற்சியில் மாநகராட்சி நிர்வாகம் ஈடுபட்டுள்ளது. இதை வன்மையாக கண்டிக்கின்றோம். தற்போது உள்ள கடைகள் அனைத்தும் உறுதி தன்மையோடு  உள்ளது. இதை இடித்து கட்ட வேண்டிய அவசியமும் இல்லை.  
காய்கறி சந்தையை இடித்துவிட்டு அடுக்குமாடி கட்டிடத்தில் வியாபாரம் என்பது சரியாக வராது. கீழ்தளத்தில் உள்ள கடைகளில் மட்டுமே வியாபாரம் நடக்கும். மாடிப்படியேறி பொதுமக்கள் பொருட்களை வாங்கும் நிலையில் இல்லை. இதனால் வியாபாரிகள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். மாநகராட்சி நிர்வாகம்  கீழ் கடைகளை மட்டும் கட்டி ஏற்கனவே  கடை வைத்துள்ள வியாபாரிகளுக்கு மீண்டும் கடைகளை ஒதுக்கீடு செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Tags : Hunger strikers ,demolition ,
× RELATED NCERT பாடப்புத்தகங்களில், பாபர் மசூதி...