×

புதிய யானை வழித்தட பிரச்னைக்கு தீர்வு காண கூடலூர் கூட்டத்தில் வலியுறுத்தல்

கூடலூர், மே 9: தமிழக அரசின் வனத்துறை அறிவித்துள்ள புதிய யானை வழித்தட திட்டத்தை திரும்ப பெறக்கோரி கூடலூர் சட்டமன்ற தொகுதி முழுவதும் வரும் 13-ம் தேதி முதல் கட்ட போராட்டமாக வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றவும் தொடர்ந்து பல்வேறு போராட்டங்கள் நடத்தவும் கூடலூர் சட்டமன்ற உறுப்பினர் தலைமையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு முழுவதும் புதிதாக 21க்கும் மேற்பட்ட யானை வழித்தடங்கள் குறித்து தமிழக அரசின் வனத்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. ஏற்கனவே 20 வழித்தடங்கள் உள்ள நிலையில் தற்போது 42 வழித்தடங்களாக உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் இதில் பொது மக்களுக்கு ஏற்படக்கூடிய பிரச்னைகள் குறித்து மின்னஞ்சல் மூலம் தகவல் தெரிவிக்க குறுகிய கால அவகாசம் வழங்கப்பட்டது.

மேலும் இந்த திட்டம் குறித்த அறிவிப்பு முழுவதுமாக ஆங்கிலத்தில் இருந்ததால் சாதாரண பொது மக்கள் புரிந்து கொள்ளாத முடியாத நிலையில் உள்ளதாக எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. யானை வழித்தட திட்டங்களால் பொதுமக்களின் வாழ்வாதார உரிமைகள் பாதிக்கப்படும் என்பதால் இந்த புதிய திட்டத்தை முழுவதுமாக ரத்து செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அனைத்து தரப்பு மக்கள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக நேற்று கூடலூர் சட்டமன்ற உறுப்பினர் பொன் ஜெயசீலன் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு அதிமுக ஒன்றிய செயலாளர்கள் பத்மநாதன், ஜான்சன், மொய்தீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பொதுக்குழு உறுப்பினர் ராஜா தங்கவேல் வரவேற்று பேசினார்.

கூட்டத்தில் கருத்துரை வழங்கியவர்கள் பேசியதாவது: கூடலூர் சட்டமன்ற தொகுதியில் பல நூற்றாண்டு காலமாக வாழ்ந்து வரும் மவுண்ட்டாடன் செட்டி மற்றும் பணியாளர் குறும்பர் இன பழங்குடியின மக்கள், 200 ஆண்டுகளுக்கு முன் ஆங்கிலேயர் காலத்தில் அழைத்து வரப்பட்ட தேயிலை தோட்ட தொழிலாளர்கள், 1950 ம் ஆண்டுகளில் நேரு காலத்தில் அதிக உணவு உற்பத்தி திட்டத்தின் கீழ் குடியேறிய விவசாயிகள், 1970 ம் ஆண்டுகளுக்கு பின் குடியேறிய இலங்கையில் இருந்து தாயகம் திரும்பிய தமிழ் குடும்பங்கள், மறுவாழ்வு திட்டத்தில் குடியமர்த்தப்பட்ட டேன் டீ தேயிலை தோட்ட தொழிலாளர்கள் குடும்பங்கள் பல தலைமுறைகளாக வாழ்ந்து வருகின்றனர்.தொடர்ந்து, கடந்த பல வருடங்களாக கூடலூர் சட்டமன்ற தொகுதி மக்களின் வாழ்வாதாரங்களை பாதிக்கும் வகையில் பெல்ட் ஏரியா, தனியார் வன பாதுகாப்பு சட்டம், புலிகள் பாதுகாப்பு திட்டம் என பல்வேறு சட்டங்கள் திணிக்கப்பட்டு வருகின்றன.

இதனால் இப்பகுதி மக்கள் நிம்மதி இழந்து வாழ்ந்து வருகின்றனர். மேலும் கடந்த 50 வருடங்களுக்கும் மேலாக தீர்க்கப்படாத உள்ள பிரச்னையாக பிரிவு 17 நிலப்பிரச்னை உள்ளது. இதனால் சுமார் 10,000-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் மின் இணைப்பு பெற முடியாத நிலையில் வாழ்ந்து வருகின்றனர். இதில் மக்களுக்கு ஏற்படும் சிரமங்கள் பிரச்னைகளை தீர்க்க வலியுறுத்தி தொடர் போராட்டங்கள் பல நடத்தப்பட்டு வந்துள்ளன. எனினும் இதற்கு உரிய தீர்வுகள் காணப்படாத நிலை தொடர்கிறது. இந்த நிலையில் புதிய யானை வழித்தட அறிவிப்பு இப்பகுதி மக்களை மேலும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. இதில் வனத்துறை உயரதிகாரிகள் திட்டமிட்டு இப்பகுதி மக்களை வெளியேற்றும் வகையில் செயல்பட்டுள்ளனர். இதில் பொதுமக்கள் கருத்து தெரிவிக்க வழங்கப்பட்டுள்ள குறுகிய கால அவகாசம் மற்றும் அனைத்து மக்களுக்கும் புரியாத வகையில் முழுவதுமாக ஆங்கிலத்தில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பு போன்றவை இதனை உறுதிப்படுத்துகிறது.

வனத்துறையின் இந்த அறிவிப்பு இப்பகுதி மக்களை முழுவதுமாக வாழ்வாதாரத்தை இழக்க செய்யும் செயலாக உள்ளது. எனவே தமிழக அரசு இதில் உரிய கவனம் செலுத்தி திட்டத்தில் உள்ள சாதக பாதகங்களை ஆய்வு செய்து புதிய யானை வழித்தட திட்டத்தை முழுமையாக ரத்து செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து இப்பிரச்னைக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி வரும் 13ம் தேதி தொகுதி முழுவதும் உள்ள அனைத்து இல்லங்கள், வாகனங்கள், தெருக்களில் கருப்பு தொடர் கருப்புக்கொடி போராட்டம் நடத்துவது என்றும், சமூக வலைத்தளங்களில் இது குறித்து தொடர் பதிவுகளை வெளியிடுவது என்றும், தொடர்ந்து பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்துவது என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கூட்டத்தில் கூடலூர் அனைத்து வியாபாரிகள் சங்க நிர்வாகிகள் பாதுஷா, ரசாக், தென்னிந்திய தாயகம் திரும்பியோர் மேம்பாட்டு சங்க செயலாளர் ஆனந்தராஜா, கூடலூர் அமைப்பாளர் வேலு ராஜேந்திரன், நாம் தமிழர் கேதீஸ்வரன், எஸ்டிபிஐ பிரோஸ், அகில இந்திய நில புரோக்கர்கள் சங்க செயலாளர் நாகூர் மீரான், தேமுதிக குரு, லீகல் பாரம் யாசின், எஸ்என்டிபி பிந்துராஜ், தொகுதி மக்கள் இயக்கம் எஸ்.கே ராஜு, அமமுக தம்பி ராமசாமி, மற்றும் அனைத்து ஆட்டோ சங்க பிரதிநிதிகள் உள்பட பலர் கலந்து கொண்டு கருத்துரை வழங்கினர். முடிவில் நீலமலை மாவட்ட இலக்கிய அணி பொறுப்பாளர் முஜிபுர் ரஹ்மான் நன்றி கூறினார். தமிழ்நாடு அரசின் பொருளாதாரம் நடப்பு நிதியாண்டில் 8.08 சதவீதம் முதல் 10.69 சதவீதம் வரை உயரும் எனவும், இந்திய சராசரி பொருளாதார வளர்ச்சியை விட தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி வேகமாக நிகழ்வதாகவும் என, சி.ரங்கராஜன் மற்றும் கே.ஆர்.ரங்கராஜன் மற்றும் கே.ஆர்.சண்முகம் ஆகியோர் மேற்கொண்ட ஆய்வில் தெரிய வந்துள்ளது.

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியை வடிவமைப்பதில் தமிழ்நாடு முக்கியப் பங்காற்ற வேண்டும் என்ற குறிக்கோளோடு, 2030 ஆண்டுக்குள் தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை ஒரு லட்சம் கோடி அமெரிக்க டாலர் (₹83 லட்சம் கோடி) அளவுக்கு உயர்த்த வேண்டும் என தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் இலக்கு நிர்ணயித்துள்ளார். இதற்கேற்ப துறை தோறும் முதலீடுகள், தொழில்நுட்ப வளர்ச்சிகள், உள் கட்டமைப்பு மேம்பாடுகளை சாத்தியமாக்கும் வகையில் பல்வேறு திட்டங்கள் தமிழ்நாடு அரசால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதுதவிர, சர்வதேச நிறுவனங்கள் இந்தியாவில் தொழில் தொடங்க ஏதுவாக, உலக முதலீட்டாளர் மாநாட்டை கடந்த ஜனவரியில் தமிழ்நாடு அரசு நடத்தியது. 2 நாள் மாநாட்டிலேயே ₹6,64,180 கோடி முதலீடு ஈர்க்கப்பட்டது. இதன்மூலம் நேரடியாகவும் மறைமுகமாகவும் 26.9 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும்.

இதுபோல் கடந்த பிப்ரவரியில் ஸ்பெயின் நாட்டு நிறுவனங்கள் தமிழ்நாட்டில் ₹3,440 கோடி முதலீடு செய்ய ஒப்பந்தம் செய்திருக்கின்றன. தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்துவதற்கான வாய்ப்புகளை இவை ஏற்படுத்திக் கொடுத்திருக்கின்றன. இதற்கேற்ப தமிழ்நாட்டின் பொருளாதாரம் நடப்பு 2024-25 நிதியாண்டில் 8.08 சதவீதம் முதல் 10.69 சதவீதம் வரை உயரும் என கணிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு மாநில பொருளாதாரம் குறித்து ரிசர்வ் வங்கி முன்னாள் கவர்னர் சி.ரங்கராஜன் மற்றும் மெட்ராஸ் ஸ்கூல் எகனாமிக்ஸ் தலைவர் மற்றும் இயக்குநர் கே.ஆர்.சண்முகம் ஆகியோர் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கடந்த 2023-24 நிதியாண்டில், மாநிலத்தின் வளர்ச்சி விகிதம் 8.08 சதவீதம் முதல் 9.44% வரை இருக்கும் எனவும் மதிப்பிடப்பட்டுள்ளது. இதே நிதியாண்டில் நாட்டின் சராசரி பொருளாதார வளர்ச்சியானது 7.3 சதவீதமாக இருக்கும் என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. இத்துடன் ஒப்பிடுகையில் தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

இதன் மூலம், நாட்டின் சராசரியை விட வேகமான பொருளாதார வளர்ச்சியை தமிழ்நாடு எட்டியுள்ளது இந்த ஆய்வறிக்கையின் மூலம் நிரூபணம் ஆகியுள்ளது. கடந்த 2006 -2011 கலைஞர் ஆட்சிக் காலத்தில் தமிழ்நாடு 10.3 சதவீதம் என்ற வலுவான பொருளாதார வளர்ச்சியை எட்டியது. பின்னர் 10 ஆண்டு அதிமுக ஆட்சிக்காலத்தில் இத 6.21 சதவீதமாக வீழ்ந்தது. இந்நிலையில் தற்போது மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆட்சியில் மீண்டும் வளர்ச்சிப்பாதையில் பயணிப்பதை இந்த அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது. நாட்டின் பொருளாதார வளர்ச்சி சரிந்தபோதிலும், தமிழ்நாடு இதர பெரிய மாநிலங்களவை விடவும் வளர்ச்சி அடைந்துள்ளதைக் காண முடிகிறது என ஆய்வறிக்கையில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. பணவீக்கம், வேலைவாய்ப்பு, கடன் கிடைப்பது, சமூக அளவீடுகள் மற்றும் பருவநிலை மாற்றம் உள்ளிட்ட மாநிலப் பொருளாதாரத்தின் பல்வேறு அம்சங்களை விளக்கியுள்ள இந்த ஆய்வறிக்கை, இரட்டை இலக்க வளர்ச்சியை அடைவதற்கான திறன் மாநிலத்திற்கு உள்ளது. 2021-22 முதல் 2022-23 வரை மாநிலத்தின் சராசரி ஆண்டு பொருளாதார வளர்ச்சி 8% ஆக இருந்தது என்று குறிப்பிட்டுள்ளது.

தமிழ்நாடு அரசின் பல்வேறு செயல்பாடுகள் மாநில முன்னேற்றத்துக்கு எந்த அளவுக்கு உதவியுள்ளது என்பது இந்த அறிக்கை மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்கின்றனர் பொருளாதார வல்லுநர்கள். முதலீடுகள், வேலை வாய்ப்புகள், உற்பத்தி திறன் அதிகரிக்கும் வகையிலும் தமிழ்நாடு அரசு மேற்கொண்ட தீவிர நடவடிக்கைகள் வளர்ச்சியின் வேகத்தையும், நிலைத்தன்மையையும் உறுதிப்படுத்துவதாக அவர்கள் கூறுகின்றனர். வரும் ஆண்டுகளில் இந்த வளர்ச்சி வேகத்தை முன்னெடுத்துச் செல்ல வேண்டியது மிகவும் அவசியமானது. எனவே, வேறு பல புற காரணங்களால் மாநிலத்தின் பொருளாதாரம் பாதிக்கப்படுவதைத் தடுக்கும் வகையில் மூலதனச் செலவினங்களை அதிகரித்தல், நிதி சலுகைகளை வழங்குதல் போன்ற நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும். 12வது நிதிக்குழு பரிந்துரைத்துரைத்தபடி, கடன் ஒருங்கிணைப்பு மற்றும் நிவாரணத் திட்டங்கள், கடனைத் தள்ளுபடி செய்வதற்கான திட்டங்கள் குறித்து 16வது நிதிக்குழுவிடம் சமர்ப்பிக்க வேண்டும் என அறிக்கை கேட்டுக் கொண்டுள்ளது.

The post புதிய யானை வழித்தட பிரச்னைக்கு தீர்வு காண கூடலூர் கூட்டத்தில் வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Gudalur ,Cuddalore ,Tamil Nadu forest department ,
× RELATED கூடலூர் மாவட்டத்தில் கருப்புக் கொடி கட்டி மக்கள் போராட்டம்..!!