×

சேந்தமங்கலம் தொகுதியில் இன்று 36.64 கோடியில் வளர்ச்சி பணிகள் தொடக்க விழா

சேந்தமங்கலம், பிப்.7: சேந்தமங்கலம் தொகுதி எம்எல்ஏ சந்திரசேகரன் வெளியிட்டுள்ள அறிக்கை: சேந்தமங்கலம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட நாமக்கல் ஒன்றியத்தில், இன்று(7ம் தேதி) காலை 10 மணிக்கு வசந்தபுரம் முதல் வீதிபாளையம் வரை 1 கோடியே 70 லட்சம் மதிப்பில் தார் சாலை அமைத்தல், காவக்காரப்பட்டி முதல் ஈச்சவாரி வரை 1 கோடி மதிப்பில் தார் சாலை அமைத்தல், திப்ரமாதேவி கிராமத்தில் ரேஷன் கடை திறப்பு விழா, புதுக்கோட்டை கிராமத்தில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க அலுவலக திறப்பு விழா, எருமப்பட்டி பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 7 கோடியே 53 லட்சம் மதிப்பில் சாலை பணிகள், அம்பாயிபாளையம், பவித்திரம் ஆகிய கிராமங்களில் தொடங்க வேளாண்மை கூட்டுறவு சங்க அலுவலக திறப்பு விழா, சேந்தமங்கலம் பேரூராட்சியில் 7 கோடியே 46 லட்சம் மதிப்பில் சாலை பணிகள், காளப்பநாயக்கன்பட்டி பேரூராட்சியில் ₹6 கோடியே 23 லட்சம் மதிப்பில் சாலை பணிகள்,

சேந்தமங்கலம் ஒன்றியம் மேலப்பட்டியில் ரேஷன் கடை திறப்பு விழா உள்ளிட்டவை நடக்கிறது. நிகழ்ச்சிக்கு கலெக்டர் மெகராஜ் தலைமை தாங்குகிறார். அமைச்சர்கள் தங்கமணி, சரோஜா ஆகியோர் கலந்து கொள்கின்றனர். விழாவில் ஒன்றிய, பேரூர் நிர்வாகிகள், ஒன்றியக்குழு தலைவர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், கூட்டுறவு சங்க தலைவர்கள், தொண்டர்கள் கலந்து கொள்ள வேண்டும்.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Tags : Senthamangalam ,constituency ,
× RELATED பெண்ணிடம் நகை பறித்த வழக்கில் பாஜ பிரமுகருக்கு 3 ஆண்டு சிறை