×

பெண்ணிடம் நகை பறித்த வழக்கில் பாஜ பிரமுகருக்கு 3 ஆண்டு சிறை

சேந்தமங்கலம்: சேந்தமங்கலம் அருகே பெண்ணிடம் வழிப்பறி செய்து, 3 பவுன் நகை பறித்த பாஜ பிரமுகருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் பேரூராட்சி காமராஜபுரத்தைச் சேர்ந்தவர் செல்லமுத்து(57). இவர் சேந்தமங்கலம் ஒன்றிய பாஜ கட்சியின் துணை தலைவராக உள்ளார். இவருக்கும், சேந்தமங்கலம் அடுத்த படத்தியான்குட்டையை சேர்ந்த ராமசாமி என்பவருக்கும், கொடுக்கல்-வாங்கல் இருந்து வந்தது. கடந்த 2016ம் ஆண்டு, வரவு-செலவு கணக்கு பார்த்ததில் ராமசாமிக்கும், செல்லமுத்துக்கும் பிரச்னை ஏற்பட்டது.

அப்போது செல்லமுத்து, ராமசாமி மற்றும் அவரது மனைவி மணிமேகலையை தாக்கி, மணிமேகலையின் கழுத்தில் இருந்த 3 பவுன் நகையை பறித்துக் கொண்டு சென்று விட்டார். இதுகுறித்த புகாரின் பேரில், சேந்தமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கு, சேந்தமங்கலம் சார்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கு விசாரணை முடிந்த நிலையில், நீதிபதி ஹரிஹரன் நேற்று மாலை, செல்லமுத்துவுக்கு 3 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.12 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கினார். மேலும் தண்டனையை எதிர்த்து, மேல் முறையீடு செய்து கொள்ள ஒரு மாதம் கால அவகாசம் வழங்கினார்.

The post பெண்ணிடம் நகை பறித்த வழக்கில் பாஜ பிரமுகருக்கு 3 ஆண்டு சிறை appeared first on Dinakaran.

Tags : BJP ,Senthamangalam ,Chellamuthu ,Kamarajapuram, Senthamangalam District, Namakkal District ,Senthamangalam Union BJP Party ,
× RELATED நகை வழிப்பறி செய்த வழக்கில் பா.ஜ.க பிரமுகருக்கு 3 ஆண்டு சிறை..!!