×

ஓசூரில் மாசாணியம்மன் கோயில் விழா

ஓசூர், பிப்.7: ஓசூரில் மாசாணியம்மன் கோயிலில் 3ம் ஆண்டு மயான பூஜை மற்றும் குண்டம் விழா நடைபெற்றது. இந்த விழா கடந்த மாதம் கொடியேற்றம், காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. நேற்று காலை கணபதி ஹோமம், மகா தீபாராதனை, தேர்பேட்டை தெப்பக்குளத்தில் இருந்து அம்மனுக்கு பால்குடம், மஞ்சள் குடம் மற்றும் அலகு குத்துதல் நடைபெற்றது. தொடர்ந்து அன்னதானம் நடைபெற்றது. மாலையில் அம்மனுக்கு பாலாபிஷேகம், சிறப்பு தீபாராதனை செய்யப்பட்டது. இன்று(7ம் தேதி) அம்மனுக்கு சிறப்பு பூஜை செய்து பிரசாதம் வழங்கப்படுகிறது. நாளை(8ம் தேதி) அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெறுகிறது. மாலையில் சிறுவர்களுக்கான பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடத்தப்படுகிறது

Tags : Masaniamman Temple Festival ,Hosur ,
× RELATED குழாய் பதிப்பதை தடுத்து விவசாயிகள் போராட்டம்