×

இலவச கண்பரிசோதனை முகாம்

தர்மபுரி, பிப்.7: தர்மபுரி அரசு பொறியியல் கல்லூரியில், இலவச கண் பரிசோதனை முகாம் நடந்தது. தர்மபுரி அரசு பொறியியல் கல்லூரியில், இளைஞர் செஞ்சிலுவை சங்கம் மற்றும் செஞ்சுருள் சங்கம் சார்பில், இலவச கண் பரிசோதனை முகாம் நடந்தது. முகாமை கல்லூரி முதல்வர் சுமதி தொடங்கி வைத்தார். முகாமில் 350 கல்லூரி மாணவ, மாணவிகள், 35 பேராசிரியர்கள், 40 ஆசிரியர்கள், ஆய்வக உதவியாளர்கள் என ஏராளமானவர்கள் கண்பரிசோதனை செய்து கொண்டனர். முகாமிற்கான ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பாளர் சந்தோஷ்குமார் மற்றும் பேராசிரியர்கள் செய்திருந்தனர்.

Tags : eye camp ,
× RELATED சொந்த இடத்தில் கட்டிடம் கட்டப்படுமா?...