×

அரியலூர் நகராட்சி பகுதியில் ஏரிகளை தூர்வாரி அழகுபடுத்தும் பணி

அரியலூர், பிப்.7: அரியலூர் நகராட்சி பகுதிக்குட்பட்ட ஐயப்பன் ஏரி மற்றும் பள்ளி ஏரி ஆகிய ஏரிகளில் தூர்வாரி அழகு படுத்தும் மேம்பாடு பணிகளை மாவட்ட கலெக்டர் ரத்னா ஆய்வு செய்தார். ஆய்வின்போது அரியலூர் நகராட்சிக்கு சொந்தமான ஐயப்பன் ஏரி மற்றும் பள்ளி ஏரியில் ஜெர்மன் மேம்பாட்டு வங்கி நிதியுதவி திட்டத்தின்கீழ் ரூ.1கோடியே 56 லட்சம் மதிப்பீட்டில் தூர்வாரி அழகுபடுத்தும் மேம்பாட்டு பணிகள் நடைபெற்று வருகிறது.ஐயப்பன் ஏரியில் சுற்றியுள்ள மக்களின் நிலத்தடி நீரை பூர்த்தி செய்யும் நீர் ஆதாரமாக இருந்து வருகிறது. அரியலூர் நகராட்சி நிர்வாகம் பொதுமக்களின் நலன் கருதி ஐயப்பன் ஏரியின் கரையினை மேம்படுத்தி பொதுமக்கள், குழந்தைகள் பயன்படுத்தும் வகையில் மேம்பாட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. மேலும், பள்ளி ஏரியினை ஆழப்படுத்தி கரைகளை பலப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது. மழைக்காலங்களில் சேகரிக்கும் மழைநீரினால் கரைகள் உடைந்து செல்லாத வண்ணம் கான்கிரீட் சுவர் அமைக்கப்பட்டு வருகிறது. மேலும், மழைக்காலங்களில் மழைநீர் சேகரிக்கப்பட்டு அதனை சுற்றியுள்ள குடியிருப்புகளுக்கு நிலத்தடி நீர் ஆதாரம் கிடைப்பதற்கு முக்கிய பங்கு மேற்கண்ட ஏரிகள் மூலம் வகிக்கின்றது. மேற்கண்ட இப்பணிகள் மூலம் ஏரி கரையில் குழந்தைகளுக்கான விளையாட்டு பூங்கா, ஏரிகளை சுற்றி வருவதற்கான நடைபாதை ஆகியவைகள் அமைக்கப்பட உள்ளன என கலெக்டர் ரத்னா, தெரிவித்தார்.ஆய்வின்போது, திட்ட இயக்குநர் (ஊரக வளர்ச்சி முகமை) சுந்தர்ராஜன், நகராட்சி ஆணையர் குமரன், நகராட்சி பொறியாளர் ராதா மற்றும் பொதுப்பணி மேற்பார்வையாளர், அலுவலர்கள் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

Tags : lakes ,Ariyalur Municipality ,
× RELATED சென்னையின் முக்கிய ஏரிகளின் நீர் நிலவரம்