×

திட்டக்குடி மார்க்கெட் கமிட்டியில் திடீர் ஆய்வு தவறுகள் நடந்தால் கடும் நடவடிக்கை

திட்டக்குடி, பிப். 6: இடைத்தரகர்கள் மூலம் விற்பனை நடைபெறுவதாக வந்த புகாரையடுத்து திட்டக்குடி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அப்போது இனி தவறுகள் நடந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அலுவலர்களுக்கு எச்சரிக்கை விடுத்தனர். திட்டக்குடியில் இயங்கும் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் இடைத்தரகர்கள் மூலம் விற்பனை நடைபெறுவதாக பெறப்பட்ட புகாரின் பேரில் திட்டக்குடி வட்டாட்சியர் நேரடி ஆய்வு மேற்கொண்டார். திட்டக்குடி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் சோளம், வரகு, கம்பு போன்ற பயிர் வகைகள் விற்பனைக்காக எடுத்துக் கொள்ளப்படுகிறது. அவ்வாறு விவசாயிகள் கொண்டும் வரும் பயிர் வகைகளை இடைத்தரகர்கள் தலையிட்டு அவற்றை முழுமையாக பெற்று விற்பனை செய்வதாகவும். இதனால் அரசு நிர்ணயித்த விலையைவிட குறைவாக விவிசாயிகளுக்கு வழங்கப்படுகிறது எனவும், எடை போடும்போது ஒவ்வொரு மூட்டைக்கும் சுமார் 3 கிலோ முதல் 4 கிலோ வரை குறைத்து எடை போடுவதாகவும் புகார்கள் பெறப்பட்டன.

இதுகுறித்து தமிழக வாழ்வுரிமை கட்சியின் ஒன்றிய செயலாளர் சுரேந்தர் திட்டக்குடி தாசில்தார் செந்தில்வேலனிடம் புகார் மனு கொடுத்தார். அதன்பேரில் தாசில்தார் செந்தில்வேலன், சமூக பாதுகாப்பு தனி தாசில்தார் ரவிச்சந்திரன், துணை தாசில்தார் மஞ்சுளா ஆகியோர் திட்டக்குடி பேரூராட்சி தர்மக்குடிக்காட்டில் இயங்கும் ஒழுங்கு முறை விற்பனை கூடத்திற்கு நேரடியாக சென்று ஆய்வு செய்தனர். அப்போது எடைபோட்டு வைக்கப்பட்டிருந்த மூட்டைகளை மீண்டும் எடைபோட்டு ஆய்வு செய்தார். அப்போது அங்கு பணியில் இருந்த அலுவலர்கள் விவசாயிகள் முன்னிலையில் விலைப்பட்டியலை இதற்கென உள்ள நோட்டீஸ் போர்டில் ஒட்டி விடுவோம் என தெரிவித்தனர். ஆய்வு மேற்கொண்ட அதிகாரிகள் ஒழுங்கு முறை விற்பனைக் கூடத்தில் பணிபுரியும் அலுவலர்களிடம் விவசாயிகள் பாதிக்கப்படும் வகையில் எந்தவித செயல்பாடும் அமையக்கூடாது. அவ்வாறு தவறுகள் நடந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை செய்தனர்.

Tags : event ,project committee ,
× RELATED எல் நினோ நிகழ்வால் கிழக்கு ஆப்ரிக்க...