×

மனுநீதி நாள் முகாமில் நலத்திட்ட உதவி வழங்கல்

நெய்வேலி, பிப். 6:  வடலூர் அடுத்த மருவாய் கிராமத்தில் மனுநீதி நாள் முகாம் நடைபெற்றது. கடலூர் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜகிருபாகரன் தலைமை தாங்கினார். மனுநீதி நாள் முகாமில் குறிஞ்சிப்பாடி ஒன்றிய குழு தலைவர் கலையரசி கோவிந்தராஜ் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு 172 பயனாளிகளுக்கு ரூபாய் 18,05,400 மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கினார். இதில் சமூக பாதுகாப்புத் திட்டம், வீட்டுமனைப்பட்டா, பட்டாமாற்றம் போன்ற நலத்திட்டங்கள் வழங்கப்பட்டது. மேலும் தோட்டக்கலை துறை சார்பில் மிளகாய், தக்காளி, வெண்டை நாற்றுகள் மற்றும் வேளாண்மை துறை சார்பில் விவசாயிகளுக்கு உபகரணங்களும், பெண்கள் முன்னேற்றத்திற்காக தையல் இயந்திங்களும் வழங்கப்பட்டது.
முகாமில் ஒருங்கிணைந்த குழந்தைகள் திட்ட வளர்ச்சி துறை மூலம் இயற்கை உணவு பற்றிய கண்காட்சி, சுய உதவி குழுக்களின் கைவினைப் பொருட்கள் கண்காட்சியும் நடந்தது. இந்த முகாமில் கொளக்குடி, சேராக்குப்பம், ஆபத்தானபுரம், கருங்குழி, நைனார்குப்பம், மருவாய் உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் கலந்துகொண்டனர். இந்நிகழ்ச்சியில் கடலூர் மாவட்ட  வருவாய் கோட்டாட்சியர் ஜெகதீஸ்வரன், மாவட்ட வழங்கல் அலுவலர் வெற்றிவேல், குறிஞ்சிப்பாடி வட்டாட்சியர் கீதா உள்ளிட்ட அனைத்து துறை அதிகாரிகள், ஊராட்சி மன்ற தலைவர்கள், துணை தலைவர்கள், வார்டு உறுப்பினர்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags : day camp ,
× RELATED சித்தார்காடு ஊராட்சியில் மனுநீதி...