×

வீட்டை விட்டு வந்த மாணவிகள் பெற்றோரிடம் ஒப்படைப்பு


சிவகாசி, பிப். 6: சாத்துாரில் பெற்றோர்களிடம் கோபித்துக் கொண்டு சிவகாசிக்கு வந்த இரண்டு மாணவிகளை போலீசார் மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர். சிவகாசியில் உள்ள என்.ஆர்.கே.ஆர் சாலையில் டவுன் இன்ஸ்பெக்டர் வெங்கடாஜலபதி மற்றும் போலீசார் நேற்று முன்தினம் இரவு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது சந்தேகமான முறையில்  பள்ளிச் சீருடையில் இரண்டு மாணவிகள் சென்றதை கவனித்தனர். அவர்களை இன்ஸ்பெக்டர் வெங்கடாஜலபதி அழைத்து விசாரித்தார். இதில், ‘இரண்டு மாணவிகளும் சாத்துார் அருகே உள்ள அரசுப் பள்ளியில் 7ம் வகுப்பு படித்து வந்ததும், வீட்டில் பெற்றோரிடம் சண்டையிட்டு கோபித்துக்கொண்டு, பள்ளி முடிந்தவுடன் சிவகாசி வந்ததும் தெரிய வந்தது. உடனடியாக மாணவிகளின் பெற்றோரிடம் தொடர்பு கொண்டு இன்ஸ்பெக்டர் பேசினார். அதனை தொடர்ந்து சிவகாசி வந்து மாணவிகளை பெற்றோர்கள் அழைத்துச் சென்றனர். பெற்றோர்களுக்கும் மாணவிகளுக்கும் போலீசார் அறிவுரை வழங்கி அனுப்பி வைத்தனர்.

Tags : house ,parents ,
× RELATED 30 ஆண்டுகளாக உயர்த்தப்படாத கல்வி...