×

சாலையில் வீணாகும் பிஏபி தண்ணீர்

உடுமலை, பிப்.6:பிஏபி திட்டத்தில், முதலாம் மண்டல பாசனத்துக்கு திருமூர்த்தி அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. மடத்துக்குளம் ஒன்றியம் துங்காவி ஊராட்சி குமாரமங்கலத்தில், மெட்ராத்தி பகிர்மான கால்வாய் பிரிந்து செல்கிறது. இந்த இடத்தில் குழாய்களில் அடைப்பு காரணமாக, தண்ணீர் செல்ல முடியாமல் சாலையில் வழிந்தோடுகிறது. ரோட்டில் ஆறாக தண்ணீர் பாய்கிறது. இதனால், விளைநிலங்களுக்கு தண்ணீர் வராததால் சுமார் 2 ஆயிரம் ஏக்கர் பாதிக்கப்பட்டுள்ளது. இதுபற்றி விவசாயிகள் கூறுகையில், தண்ணீர் வீணாவது குறித்து பொதுப்பணித்துறையினருக்கு தெரிவித்தோம். ஆனால், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. நாங்களே அடைப்பை நீக்க முயற்சித்தோம். ஆனால், முடியவில்லை. கடந்த 10 நாட்களுக்கும் மேலாக தண்ணீர் வீணாகிறது. இதனால், பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டும் எங்களுக்கு பயன்படாத நிலையில் உள்ளது. அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

Tags : PAP ,road ,
× RELATED பிஏபி கால்வாய் கரையோரம் சட்ட விரோத...