×

பிப்.8ல் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை

ஈரோடு, பிப்.6: வள்ளலார் நினைவு தினத்தையொட்டி ஈரோடு மாவட்டத்தில் வரும் 8ம்தேதி அரசு மதுபான கடைகள் மற்றும் அவற்றுடன் இணைந்த பார்கள் மற்றும் மதுபான விடுதிகள், ஓட்டல்கள் உள்ள பார்கள் ஆகியவை அன்றைய தினம் மூடப்பட்டிருக்க வேண்டும். அன்றைய தினம் மது விற்பனை இல்லாத நாளாக அனுசரிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதைத் தொடர்ந்து 8ம் தேதி ஈரோடு மாவட்டத்தில் செயல்பட்டு வரும் 199 அரசு மதுபான கடைகள் அவற்றுடன் இணைந்த பார்கள், மதுபான உரிமதலங்கள் மூடப்பட்டிருக்கும். அன்றைய தினத்தில் மது விற்பனை ஏதும் நடைபெறாது. வள்ளலார் தினத்தில் மது விற்பனையில் ஈடுபடும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் கதிரவன் தெரிவித்துள்ளார்.

Tags : Holidays ,Task Shop ,
× RELATED பொங்கல் விடுமுறை நாட்களில் கூடுதல்...