×

மக்கள் எதிர்பார்ப்பு சுகாதார செவிலியர்கள், மருத்துவர்கள் மீதான நடவடிக்கையை ரத்து செய்யகோரி பெருந்திரள் முறையீடு ஆர்ப்பாட்டம்

பெரம்பலூர், பிப். 4: சுகாதார செவிலியர்கள், மருத்துவர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை நிபந்தனையின்றி ரத்து செய்ய வலியுறுத்தி பெரம்பலூர் கலெக்டர் அலுவலக சிறுவர் பூங்கா முன் தமிழ்நாடு அரசு கிராம சுகாதார செவிலியர் நலச்சங்கம், கிராம பகுதி சமுதாய சுகாதார செவிலியர்கள் கூட்டமைப்பு சார்பில் பெருந்திரள் முறையீடு ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் மீனாட்சி தலைமை வகித்தார். அமைப்பு செயலாளர் சரோஜா, தணிக்கையாளர் அறிவுக்கொடி, துணை செயலாளர்கள் அன்னலட்சுமி, ஜோதி, வசந்தா சுகுணா ராணி, பாலாம்பிகை முன்னிலை வகித்தனர். அமைப்பின் மாநில செயல் தலைவர் கோமதி, டாக்டர் ரமேஷ் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

ஆர்ப்பாட்டத்தில் தமிழகம் முழுவதும் சுகாதார செவிலியர்கள், மருத்துவர்கள் உள்ளிட்ட அனைவரின் மீதும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை நிபந்தனையின்றி ரத்து செய்ய வேண்டும். பிற நிலையினரின் பணிகளை எங்கள் மீது திணிப்பதை நிறுத்த வேண்டும். இரண்டு குழந்தை அல்லது அதற்கு மேற்பட்ட குழந்தைகள் உள்ள தாய்மார்கள் நிரந்தர குடும்பநலம் ஏற்பதும், ஏற்காததும் அவரது உரிமை, அதை கிராம சுகாதார செவிலியரிடம் திணிப்பது நிறுத்தப்பட வேண்டும். தாய் சேய் நல இறப்புக்கு காரணம் அவர்களின் சூழ்நிலை, பொருளாதாரம் அவர்களின் மனநிலை.  ஆனால் அதற்காக கிராம சுகாதார செவிலியர்களை தண்டிப்பது நிறுத்தப்பட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது. சங்க பொருளாளர் செல்வமணி நன்றி கூறினார்.

Tags : Protests ,cancellation ,health nurses ,doctors ,
× RELATED எதிர்ப்பு அலையால் மக்களை...