×

சூடாமணியில் மாசிமக விழா மாசாணியம்மன் கோயிலில் காப்புகட்ட நாளை கடைசி

க.பரமத்தி பிப். 4: சூடாமணி மாசாணியம்மன் கோயிலில் மாசிமக பூக்குழி இறங்க காப்புகட்ட நாளை (5ம் தேதி) கடைசி நாள் என கோயில் விழா குழு அறிவித்துள்ளது. கரூர் சின்னதாராபுரம் நெடுஞ்சாலையில் உள்ள சூடாமணி ஊராட்சிக்குட்பட்ட எல்லமேடு அருகே மாசாணியம்மன் கோயில் அமைந்துள்ளது. இங்கு சித்திவிநாயகர், கருப்பண்ணசுவாமி, ஏழு கன்னிமார்களான அபிராமி, மகேஸ்வரி, கௌமாரி, வைஷ்ணவி, வராகி, இந்திராணி, சாமுண்டி, துர்க்கை, பேச்சியம்மன் ஆகிய தெய்வங்கள் அருள்பாலித்து வருகின்றனர். மிகவும் சிறப்பு வாய்ந்த இக்கோயிலில் ஆண்டுதோறும் மாசிமக திருவிழா விமரிசையாக நடைபெறும்.

இந்த திருவிழாவையொட்டி கடந்த 24ம்தேதி தை அமாவாசையன்று கொடியேற்றப்பட்டு திருவிழா தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பூக்குழி (தீமிதி) இறங்க பக்தர்கள் கங்கணம் கட்டிக் கொள்ள (நாளை 5ம்தேதி) கடைசி நாளாகும். தொடர்ந்து சக்தி கரகம் பாலிக்கப்பட்டு வாணவேடிக்கையுடன் ஆனமலையில் இருந்து புனிதநீர் தீர்த்தம் கொண்டு வரப்பட்டு மாசாணியம்மனுக்கு பல்வேறு பூஜைகள் வழிபாடு நடத்தப்பட உள்ளன.
8ம்தேதி அம்மனை அலங்கரித்து கொண்டு வரப்பட்டு பூக்குழி குண்டம் ஸ்தாபிதம் செய்யப்படுகிறது. 9ம்தேதி (ஞாயிறு) எல்லைமேட்டிலிருந்து பக்தர்கள் அக்னி கரகம், சக்தி அழகு, பெண்கள் அக்னிசட்டி எடுத்து ஊர்வலமாக வந்து பூக்குழியில் இறங்கி வேண்டுதல்களை நிறைவேற்ற உள்ளனர். ஏற்பாடுகளை மாசாணியம்மன் அறக்கட்டளை மற்றும் கதர்மங்கலம் எல்லைமேடு ஊர்பொதுமக்கள், பக்தர்கள் செய்து வருகின்றனர்.
9ம் தேதி தீமிதி நிகழ்ச்சி நடக்கிறது

Tags : Masiimaga Festival ,Mass ,
× RELATED அசாமில் தொப்பை போலீஸ் பரிசோதனை: ஆகஸ்ட் 16ம் தேதி தொடக்கம்