×

சூடானூர் கிராமத்தில் எருது விடும் விழா

பாலக்கோடு, ஜன.31:  பாலக்கோடு அருகே சூடானூர் கிராமத்தில் நடந்த எருது விடும் விழாவில், 200க்கும் மேற்பட்ட காளைகள் கலந்து கொண்டன. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, பஞ்சப்பள்ளி அருகே சூடானூர் கிராமத்தில் எருது விடும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதையொட்டி பஞ்சப்பள்ளி, மாரண்டஅள்ளி, ராயக்கோட்டை ஆகிய சுற்றுவட்டார பகுதியில் இருந்து, 200க்கும் மேற்பட்ட காளைகளை கொண்டு வந்தனர். முன்னதாக கிராம மக்கள் மேள தாளங்களுடன், குல வழக்கப்படி கோ பூஜை செய்து புனித நீர் காளைகளின் மேல் தெளித்த பின்னர், ஊர் கவுண்டர் மாடுகளை விட்டார். அதனை தொடர்ந்து அலங்கரிக்கப்பட்ட 200க்கும் மேற்பட்ட காளைகள், வாடிவாசல் வழியாக  ஒவ்வென்றாக விடப்பட்டது.

சீறி பாய்ந்து வரும் காளைகளை அடக்க, ஏராளமான இளைஞர் போட்டி போட்டு காளையை விரட்டி சென்றனர். இதனை காண சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த 1000க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர். சிறப்பாக மாடுகளை   பிடித்த இளைஞர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. பிடிபடாமல் ஓடிய மாடுகளுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது. மாடுகள் ஓடும்போது, பார்வையாளர்கள் மீது பாயாமல் இருப்பதற்காக,பாதையின் இரண்டு பக்கமும் தடுப்புகள் கட்டப்பட்டிருந்தது. விழாவையொட்டி, பஞ்சப்பள்ளி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Tags : buffalo festival ,village ,
× RELATED சிவகங்கை மாவட்டத்தில் ஒரு கிராமம் ஒரு...