×

மொரப்பூர் கிராமத்தில் ₹12.33 கோடி மதிப்பில் துணை மின்நிலையம்

அரூர், ஜன.31:  மொரப்பூர் கிராமத்தில், ₹12.33 கோடி மதிப்பில் துணை மின்நிலையத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார். அரூர் வட்டம், மொரப்பூர் கிராமத்தில் ₹12.33 கோடி மதிப்பில் புதியதாக அமைக்கப்பட்டுள்ள துணை மின்நிலையத்தை, முதல்வர் எடப்பாடி பழனிசாமி, சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், காணொலிகாட்சி மூலம் நேற்று முன்தினம் திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் கலெக்டர் மலர்விழி, கலந்து கொண்டு பேசுகையில், ‘இத்துணை மின்நிலையத்திலிருந்து, மொரப்பூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளுக்கும், தொட்டம்பட்டி துணை மின்நிலையம் மற்றும் ஆர்.கோபிநாதம்பட்டி துணை மின்நிலையம் ஆகியவற்றிற்கு, தடையில்லா மின்சாரம் வழங்கப்படும். சுமார் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள், விவசாயிகள், சிறு வணிகர்கள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் பயன்பெறுவார்கள்,’ என்றார். இந்நிகழ்ச்சியில், அரூர் எம்எல்ஏ சம்பத்குமார், வேலூர் மண்டல தலைமை பொறியாளர் நந்தகோபால், மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் யசோதா மதிவாணன், அரசு வழக்கறிஞர் பசுபதி,  தர்மபுரி மேற்பார்வை பொறியாளர் பன்னீர்செல்வம், செயற்பொறியாளர்கள், உதவி செயற்பொறியாளர்கள், தாசில்தார் செல்வகுமார், அரசு அலுவலர்கள், மின்வாரிய பணியாளர்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

Tags : Subsidiary ,village ,
× RELATED மருந்து சோதனை ஆய்வகத்தில் இளநிலை...