×

ராம் பள்ளியில் ரத்ததான முகாம்

அரூர், ஜன.31:  கம்பைநல்லூர் ராம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் ரத்ததான முகாம் நடந்தது. இந்த முகாமுக்கு பள்ளி தாளாளர் வேடியப்பன் தலைமை வகித்தார். சாந்தி வேடியப்பன் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார். நிர்வாகிகள், ஆசிரியர்கள், பணியாளர்கள் 100க்கும் மேற்பட்டவர்கள் ரத்ததானம் வழங்கினர். இதில் நிர்வாக இயக்குனர் தமிழ்மணி, பவானி தமிழ்மணி, டாக்டர்கள் அரசு, மணிமேகலை, வனிதா அலுவலர்கள் கரிகாலன், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் உதயகுமார், சங்கர், பள்ளி முதல்வர்கள் சாரதி மகாலிங்கம், இருதயராஜ், உஷா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Tags : camp ,Auram ,school ,
× RELATED புதியதாக 150 மாணவர்கள் சேர்க்கை