×

விடுதிகளில் தங்கி பயில பெற்றோரின் ஆண்டு வருமானம் உயர்த்தி அரசாணை வெளியீடு

ஈரோடு, ஜன.31: ஈரோடு மாவட்டத்தில் அரசால் அங்கீகரிகப்பட்ட விடுதி கோபியில் ராமன்சரோஜினி தேவி என்ற பெயரில் செயல்பட்டு வருகிறது. இந்த விடுதியில் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் வகுப்பை சார்ந்த மாணவ, மாணவியர் படித்து வருகின்றனர். இந்த விடுதியில் தங்கி பயிலும் மாணவ, மாணவியருக்கு நபர் ஒருவருக்கு மாதம் ரூ.900 வீதம் 10 மாதங்களுக்கு உணவு மானியம் வழங்கப்படுகிறது. இவ்விடுதியில் சேர மாணவ, மாணவியரின் பெற்றோர்களது ஆண்டு வருமானம் ரூ.50 ஆயிரத்திற்குள் இருக்க வேண்டும் என அரசாணை வெளியிடப்பட்டிருந்தது. இந்நிலையில், பெற்றோர்களது ஆண்டு வருமானத்தை ரூ.50 ஆயிரத்தில் இருந்து ரூ.1 லட்சமாக உயர்த்தி தற்போது புதிதாக அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. எனவே, இந்த வாய்ப்பினை பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர்மரபினர் மாணவ, மாணவியர் பயன்படுத்திக் கொள்ளலாம் என கலெக்டர் கதிரவன் தெரிவித்துள்ளார்.

Tags : Govt ,parents ,hostels ,
× RELATED எந்த அறிவியல்பூர்வமான ஆய்வும்...