×

அரிமா சங்கம் சார்பில் இலவச மருத்துவ முகாம்

அரூர், ஜன.30:  அரூரில் அரிமா சங்கம் சார்பில், முன்னாள் ஆளுநர் மாசி நினைவாக இலவச பொது மருத்துவ முகாம் நடந்தது. அரூர் அரிமா சங்கம் சார்பில், மறைந்த முன்னாள் அரிமா அளூநர் மாசியின் 14ம் ஆண்டு நினைவு நாளையொட்டி, இலவச பொது மருத்துவ முகாம் நடந்தது. முகாமை அரிமா மாவட்ட இணை செயலாளரும், அம்மன் கிரானைட்ஸ் உரிமையாளருமான முத்து ராமசாமி தொடங்கி வைத்தார். இந்த முகாமில், சேலம் கோகுலம் மருத்துவமனை, கோவை கங்கா மருத்துவமனை, புற்றுநோய் அறுவை சிகிச்சை நிபுணர் கதிர்வேல்குமரன், கோவை அரவிந்த் கண் மருத்துவமனை, பிரதீபா பல் மருத்துவமனை, ஈரோடு சுப்ரீம் அரிமா சங்க ரத்த வங்கி உள்ளிட்ட மருத்துவமனைகளிலிருந்து சிறப்பு மருத்துவர்கள் வந்து, பயனாளிகளை பரிசோதனை செய்து தக்க ஆலோசனைகள் வழங்கினர்.

இதில் அரிமா மாவட்ட தலைவர்கள் தியாகராஜன், இளையப்பன், முருகேசன், செழியன் மற்றும் அரிமா சங்க பொறுப்பாளர்கள் தீபக்குமார், சிற்றரசு, சுரேஷ், செல்வகுமார், சிவகுமார், முருகேசன், பழனி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். மருத்துவ முகாமில் 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

Tags : Free Medical Camp ,Arima Society ,
× RELATED மீஞ்சூர் காவல் நிலையத்தில் இலவச மருத்துவ முகாம்