×

துவங்கியது கோடை வெயில் தர்பூசணி பழங்கள் விற்பனை அமோகம்

சிதம்பரம், ஜன. 30:  கடந்து சில தினங்களாக சிதம்பரம் பகுதியில் பனி குறைந்து, வெயில் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்து வருகிறது. காலை முதலே நன்றாக வெயில் அடிப்பதால் பொதுமக்கள் அடிக்கடி சோர்வாகி விடுகின்றனர். சோர்வை போக்குவதற்கு கோடை வெயிலுக்கு ஏற்ற இதமான பழம் தர்பூசணி. தற்போது வெயில் காலம் துவங்கி விட்டதையொட்டி சிதம்பரம் நகரில் தர்பூசணி பழங்கள் விற்பனை அதிகரித்துள்ளது.பல்வேறு பகுதிகளில்  விளைந்துள்ள தர்பூசணி பழங்கள் லாரிகளில் கொண்டு வரப்பட்டு சிதம்பரம் நகரின் முக்கிய வீதிகளில் விற்பனை செய்யப்படுகிறது. கோடை வெயிலுக்கு இதமாக இருப்பதால் தர்பூசணி பழத்தை ஏராளமான பொதுமக்கள் வாங்கியும், சாப்பிட்டுவிட்டும் செல்கின்றனர்.

Tags : summer sun watermelon fruit sale ,
× RELATED அம்மன் கோயிலில் தாலி திருட்டு