×

தேனியில் மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டு போட்டிகள்

தேனி, ஜன. 30: மாற்றுத் திறனாளிகளுக்கான விளையாட்டு போட்டிகள் தேனி மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நடந்தது. தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் தேனிமாவட்ட பிரிவின் சார்பில் தேனியில் உள்ள மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நேற்று மாவட்ட அளவிலான மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டு போட்டிகள் நடந்தது. இப்போட்டிகளை மாவட்ட கலெக்டர் பல்லவிபல்தேவ் துவக்கி தலைமை வகித்து துவக்கி வைத்தார். மாவட்ட விளையாட்டு அலுவலர் முருகன் முன்னிலை வகித்தார். இப்போட்டிகளில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து சுமார் 200 கண்பார்வையற்றோர், மனநலம் குன்றியோர், காதுகேளாதோர் கலந்து கொண்டனர்.

கண்பார்வையற்றவர்களுக்காக 50 மீட்டர் ஓட்டம், மிககுறைந்த பார்வைத்திறன்படைத்தோருக்கான 100 மீட்டர் ஓட்டம், நின்றநிலையில் தாண்டுதல், குண்டு எறிதல் போட்டிகள் நடத்தப்பட்டன. மனநலம் குன்றியவர்களுக்கான ஓட்டப்பந்தயம், பந்து எறிதல், நின்ற நிலையில் தாண்டுதல் உள்ளிட்ட போட்டிகளும், காதுகேளாதவர்களுக்கான 100 மீ ஓட்டம், நீளம் தாண்டுதல், குண்டு எறிதல், கபடி உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டன. விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு மற்றும் பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. இதில் வெற்றி பெற்று முதலிடம் பிடித்தவர்கள் மாநில அளவிலான போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டனர்.

Tags : Sports Competitions ,Beekeepers ,
× RELATED கேலோ இந்தியா விளையாட்டு போட்டி...