×

கேலோ இந்தியா விளையாட்டு போட்டி விழிப்புணர்வு ஓட்டம்: 200க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

பெரம்பலூர்: பெரம்பலூரில் கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு குறித்த விழிப்புணர்வு ஓட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு அரசு சார்பில் வரும் 19ம் தேதி முதல் 31ம் தேதி வரை 26 விளையாட்டுப் போட்டிகள் மற்றும் சிலம்பம் மாதிரி விளையாட்டுப்போட்டி 4 மாவட்டங்களில் நடக்கிறது. இப்போட்டிகள் குறித்து பொதுமக்களி டையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை சார்பில் நேற்று (2ம் தேதி கலெக்டர் அலுவலகம் அருகில் விழிப்புணர்வு ஓட்டப் போட்டி நடத்தப்பட்டது. இதனை பெரம்பலூர் மாவட்ட வருவாய் அலுவலர் வடிவேல் பிரபு, பெரம்பலூர் எம்எல்ஏ பிரபாகரன் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர். 5 கி.மீ. தொலைவிற்கு நடத்தப்பட்ட இந்தப் போட்டிகளில் 25 வயதிற்கு உட்பட்ட பள்ளி, கல்லலூரிகளைச் சேர்ந்த 200க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். இந்த விழிப்புணர்வு ஓட்டம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் துவங்கி பாலக்கரை வளைவு சென்று மீண்டும் கலெக்டர் அலுவலக வளாகத்தில் நிறைவு பெற்றது. இப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு வரும் 15ம் தேதி நடைபெறும் விழாவில் பரிசுகள் வழங்கப்பட உள்ளது. இந்த நிகழ்சியில் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் சிவா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

The post கேலோ இந்தியா விளையாட்டு போட்டி விழிப்புணர்வு ஓட்டம்: 200க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு appeared first on Dinakaran.

Tags : Gallo India Sports Competition Awareness Drive ,Perambalur ,Galo India Youth Games ,Tamil Nadu government ,Silambam ,
× RELATED பெரம்பலூர் மாவட்ட கிரிக்கெட் வீரர்களுக்கான தேர்வுப் போட்டி