×

கொடைக்கானல் கீழ்மலை பகுதியில் மக்கள் தொடர்பு முகாம்

கொடைக்கானல், ஜன. 30:கொடைக்கானல் கீழ் மலைப்பகுதியில் மக்கள் தொடர்பு முகாம் நடந்தது.  கொடைக்கானல் கீழ்மலை பகுதியான தாண்டிக்குடி அடுத்த கடுகுதடிப்புதூரில் மக்கள் தொடர்பு முகாம் நடந்தது. கலெக்டர் விஜயலட்சுமி தலைமை வகித்தார். கொடைக்கானல் ஆர்டிஓ சுரேந்திரன் முன்னிலை வகித்தார். இந்த மக்கள் தொடர்பு முகாம் மலைவாழ் கிராம மக்கள் திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்திற்கு சென்று தங்களது கோரிக்கைகளை கொடுப்பதற்கு ஏற்படும் சிரமங்களை குறைக்கும் வகையில் அந்த பகுதிகளிலேயே நடத்தப்பட்டது. இதன் காரணமாக மலைப் பகுதி மக்கள் தங்களது தனிப்பட்ட தேவைகளையும் பிரச்னைகளையும் மக்கள் தொடர்பு முகாமில் தெரிவிக்கலாம்.

இதற்காகவே மலைவாழ் கிராம பகுதியான இந்த கருகுதடி புதூரில் மக்கள் தொடர்பு முகாம் நடத்தப்பட்டது. இதில் ஏழு பேருக்கு முதியோர் பென்சன், 20 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டாக்கள், 14 பேருக்கு பழங்குடி இன ஜாதிச் சான்றிதழ், மூன்று பேருக்கு விபத்து நிவாரணத் தொகையும், ஒன்பது பேருக்கு பளியர் ஜாதி சான்று, ஒருவருக்கு தையல் இயந்திரமும், இரண்டு பேருக்கு சிறு குறு விவசாயிகளுக்கான அடையாள அட்டையும், இரண்டு பேருக்கு உதவி சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.அரசு நலத்திட்ட உதவிகளை லெக்டர் விஜயலட்சுமி வழங்கினார்.மக்கள் தொடர்பு முகாமில் சமூக பாதுகாப்பு திட்ட துணை ஆட்சியர் சிவகுமார், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சாமிநாதன், கொடைக்கானல் தாசில்தார் வில்சன் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags : People Contact Camp ,Kodaikanal ,downstream ,
× RELATED ஊட்டி-கொடைக்கானல் செல்ல இ-பாஸ்...