×

பார்வையற்றோர் பள்ளியில் தொழில் பயிற்றுநர் பணி விண்ணப்பிக்க அறிவிப்பு

சிவகங்கை, ஜன. 29: சிவகங்கை பார்வையற்றோர் பள்ளியில் தொழில் பயிற்றுநர் பணிக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: அரசு சிறப்புப் பள்ளிகளில் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் விதமாக சிவகங்கை பார்வைத்திறன் குறையுடையோருக்கான அரசு தொடக்கப்பள்ளியில் ஒரு கணினி ஆய்வகம் அமைப்பதற்கும், ஆய்வகத்தில் பணிபுரிந்து பாடம் போதிக்க மாதம் ரூ.15 ஆயிரம் தொகுப்பூதிய அடிப்படையில் தொழிற்பயிற்றுநராக பணிபுரிய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இப்பணிக்கு பி.இ(கம்ப்யூட்டர் சைன்ஸ்), பி.எஸ்சி(கம்ப்யூட்டர் சைன்ஸ், இன்பர்மேஷன் டெக்னாலஜி) பி.சி.ஏ இவற்றில் ஏதேனும் ஒரு பட்டப்படிப்புடன் பி.எட் முடித்திருக்க வேண்டும். வயது வரம்பு இல்லை. தொகுப்பூதிய அடிப்படையிலான நியமனம் என்பதால் இனசுழற்சி முறை கடைப்பிடிக்கப்பட மாட்டாது. மேற்குறிப்பிட்ட தகுதியுடைய பார்வையற்றவருக்கு மட்டும் முன்னுரிமை வழங்கப்படும். தகுதியுடைய சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்தவர்கள் மட்டும் 07.02.2020க்குள் சுயசான்றொப்பமிட்ட ஜெராக்ஸ் நகல் சான்றுகள், ஆவணங்களுடன் சிவகங்கை நகர் இளையான்குடி சாலையிலுள்ள பார்வைத்திறன் குறையுடையோருக்கான அரசு தொடக்கப்பள்ளி தலைமையாசிரியருக்கு விண்ணப்பிக்க வேண்டும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Blind ,School ,
× RELATED உதவித்தொகை உயர்த்தக்கோரி பார்வையற்றோர் சாலை மறியல்