×

போச்சம்பள்ளியில் மின்னல் வேக பஸ்களால் மக்கள் பீதி

போச்சம்பள்ளி, ஜன.29: போச்சம்பள்ளி சிப்காட்டில் தொழிற்சாலைகள் இயங்கி வருகிறது. இந்த தொழிற்சாலைகளுக்கு காரிமங்கலம், காவேரிப்பட்டணம், திருப்பத்தூர், கல்லாவி, ஆனந்தூர் உள்ளிட்ட பல பகுதிகளிலிருந்து தொழிலாளர்கள் பணிக்கு வந்து செல்கின்றனர். தொழிலாளர்களை பணிக்கு அழைத்து வர கம்பெனி சார்பில் பஸ்கள் மற்றும் கார்கள் இயக்கப்படுகிறது. இந்நிலையில், இந்த பஸ்கள் மின்னல் வேகத்தில் இயக்கப்படுவதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கூறுகையில், சிப்காட் தொழிற்சாலையில் தொழிலாளர்களின் வசதிக்காக பஸ்கள் இயக்கப்படுகிறது. அந்த பஸ்கள் குடியிருப்பு பகுதியில் அதிவேகத்தில் இயக்கப்படுவதால் விபத்து அபாயம் உள்ளது. அத்துடன் ஏர் ஹாரன்களை ஒலித்தபடி செல்வதால். நோயாளிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து போக்குவரத்து துறை அதிகாரிகளிடம் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்காமல் மெத்தன போக்கில் உள்ளனர்.  எனவே, மக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் செல்லும் தனியார் கம்பெனி பஸ்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

Tags : Pochampally ,
× RELATED போச்சம்பள்ளியில் தென்னங்கன்று விற்பனை அமோகம்; வியாபாரிகள் மகிழ்ச்சி