×

காரிமங்கலம் மேற்கு ஒன்றியத்தில் எம்பி நன்றி தெரிவிப்பு

காரிமங்கலம், ஜன.29: காரிமங்கலம் மேற்கு ஒன்றியத்தில், தர்மபுரி திமுக எம்பி டாக்டர் செந்தில்குமார், மாவட்ட கவுன்சிலர் தீபா முருகன் ஆகியோர் வாக்களர்களை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தனர். காரிமங்கலம் மேற்கு ஒன்றியத்தில் தும்பலஅள்ளி, புலிக்கல் பேகாரஅள்ளி, கொட்டுமாரணஅள்ளி, எலுமிச்சினஅள்ளி, அனுமந்தபுரம் ஆகிய பஞ்சாயத்துகளை சேர்ந்த  நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்களில், தர்மபுரி மாவட்ட திமுக எம்பி டாக்டர் செந்தில்குமார் மற்றும் மாவட்ட கவுன்சிலர் தீபா முருகன் ஆகியோர் வாக்காளர்களை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தனர். இந்நிகழ்ச்சியில் மேற்கு ஒன்றிய செயலாளர் வக்கீல் கோபால், முன்னாள் அவை தலைவர் சிவாஜி, முன்னாள் பொதுக்குழு உறுப்பினர் சண்முகம், முன்னாள் ஒன்றிய செயலாளர்கள் கிருஷ்ணன், ஓபுளி மாரியப்பன், முன்னாள் இளைஞரணி அமைப்பாளர் மாரவாடி முருகன், இளைஞர் அணி துணை அமைப்பாளர் மகேஷ்குமார், ஊராட்சி மன்ற தலைவர்கள் கண்ண பெருமாள், தீர்த்தகிரி, செந்தில்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags : MB ,Karimamangalam Western Union ,
× RELATED 96 எம்பி தொகுதிகள் மற்றும் 2...